கொரோனா வைரஸால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரிப்பு! இதுவரை எவ்வளவு தெரியுமா?

கொரோனா வைரஸால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரிப்பு! இதுவரை எவ்வளவு தெரியுமா?


Corona death increase

சீனாவை அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் நோய்த் தொற்று, தற்போது உலக நாடுகளையும் அச்சுறுத்தி வருகிறது. சீனா மட்டுமல்லாமல், தற்போது கொரோனா வைரஸால் பல நாடுகள் பாதிக்கப்பட்டுள்ளன. 

சீனாவில் கொரோனா வைரஸால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 3,012-ல் இருந்து 3,042 ஆக உயர்ந்துள்ளது. கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 80,409-ல் இருந்து 80,552 ஆக உயர்ந்துள்ளது. இந்தியாவில் இதுவரை 30 பேருக்கு கொரோனா வைரஸ் தாக்கி இருப்பதாக நாடு முழுவதும் உஷார்படுத்தப்பட்டுள்ளது.

corona

 கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு இத்தாலியில் 107 பேரும், அமெரிக்காவில் 11 பேரும் பலியாகியுள்ளனர். இங்கிலாந்தில் முதன்முறையாக கொரோனா பாதிப்பால் ஒருவர் உயரிழந்துள்ளார். 

சீனாவை தொடர்ந்து தென்கொரியா மற்றும் ஈரானில் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது. ஈரானில் இந்த நோயால் நேற்று வரை 92 பேர் உயிரிழந்தனர். வைரஸ் பாதிப்பு எண்ணிக்கையும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. 

இந்நிலையில், ஈரானில் கொரோனா வைரஸ் பாதிப்புக்கு இன்று மேலும் 15 பேர் பலியாகினர். இதையடுத்து, பலியானோர் எண்ணிக்கை 107 ஆக உயர்ந்துள்ளது.