பாகிஸ்தான் நாட்டையும் பந்தாடும் கொரோனா.! இதுவரை அங்கு மொத்த பாதிப்பு மற்றும் உயிரிழப்பு எவ்வளவு தெரியுமா.?corona-current-status-in-pakistan

பாகிஸ்தான் நாட்டில் கடந்த 24 மணிநேரத்தில் மட்டும் 1,332 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

உலகம் முழுவதும் வேகமாக பரவிவரும் கொரோனா வைரஸ் பாகிஸ்தான் நாட்டிலும் அதிக அளவில் பரவிவருகிறது. இந்நாட்டில் நேற்று மட்டும் புதிதாக 1,332 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டதாக அந்நாட்டின் சுகாதாரதுறை தெரிவித்துள்ளது.

corona

கொரோனா பரவலை தடுக்கவும், மக்களை கொரோனா வைரஸில் இருந்து மீட்கவும் பாக் அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இருப்பினும் அந்நாட்டில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட நோயாளிகளின்மொத்த எண்ணிக்கை 2,67,428 ஆக உயர்ந்துள்ளது.

அதேபோல் கடந்த 24 மணிநேரத்தில் மட்டும் பாகிஸ்தான் நாட்டில் 38 பேர் கொரோனா வைரஸினால் உயிரிழந்துள்னனர். இதன்மூலம் அந்நாட்டில் கொரோனாவால் பலியானவர்களின் மொத்த எண்ணிக்கை 5,677 ஆக அதிகரித்துள்ளது.