கொரோனா வைரஸ் கோரத்தாண்டவம்! ஒரே நாளில் அதிகரித்த பலி எண்ணிக்கை!

கொரோனா வைரஸ் கோரத்தாண்டவம்! ஒரே நாளில் அதிகரித்த பலி எண்ணிக்கை!


Corona attack increased

 

சீனாவில் நேற்று ஒரே நாளில் மட்டும் கொரோனா வைரஸ் பாதிப்பிற்கு 242 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் இந்த வைரஸ் தாக்குதலுக்கு பலியானோர் எண்ணிக்கை 1357 ஆக அதிகரித்துள்ளது.

உலகம் முழுவதும் பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்திவரும் கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு இதுவரை பலர் உயிர் இழந்துள்ளனர். சீனாவின் உஹான் நகரில் இருந்து பரவ தொடங்கியதாக கருதப்படும் இந்த வைரஸ் தற்போது வெவ்வேறு நாடுகளுக்கும் பரவ தொடங்கியுள்ளது.

corona

சீனாவில் கொரோனா வைரஸ் தாக்குதலால் நேற்றுமுன்தினம் 94 பேர் உயிரிழந்து உள்ளனர்.  இதனால் பலி எண்ணிக்கை 1,118 ஆக அதிகரித்து உள்ளது.  இதேபோன்று 1,638 பேருக்கு பாதிப்பு உறுதி செய்யப்பட்டது.  இதனால் 44,200க்கும் கூடுதலான பேருக்கு சீனா முழுவதும் வைரஸ் பாதிப்பு உள்ளது உறுதி செய்யப்பட்டது.

இந்தநிலையில் நேற்று ஒரே நாளில்
கொரோனா வைரஸ் தாக்குதலால் 242 பேர் பலியான நிலையில், வைரஸ் பாதிப்பிற்கு பலியானோர் எண்ணிக்கை இன்று 1,350ஐ கடந்துள்ளது.  இதேபோன்று 14,840 பேருக்கு கூடுதலாக வைரஸ் பாதிப்பு உறுதியாகியுள்ளது.  இதனால் இந்த எண்ணிக்கை இன்னும் அதிகரிக்க கூடும் என அஞ்சப்படுகிறது.