உலகம்

உலகமே வெறுப்பில் இருக்கும்போது முத்தப் போட்டி நடத்தி கொண்டாடும் சீனர்கள்..! வைரல் புகைப்படம்.!

Summary:

Chinese celebrating success of corono through lip kiss

கொரோனோவில் இருந்து மீண்டதை கொண்டாடும் விதமாக சீனாவை சேர்ந்த நிறுவனம் ஓன்று 10 ஜோடிகளை வைத்து முத்த போட்டி நடத்தியுள்ளது.

சீனாவின் உஹான் நகரில் இருந்து பரவ தொடங்கிய கொரோனா வைரஸ் தற்போது உலகம் முழுவதும் வேகமாக பரவி பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்திவருகிறது. கொரோனாவால் பெரும்பாலான நாடுகளில் முழு ஊரடங்கு அமலில் உள்ளது. அமெரிக்கா போன்ற வல்லரசு நாடுகள் கொரோனாவால் பெரிய அளவில் பாதிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், உலகமே சீனா மீது செம கடுப்பில் இருக்கும்போது கொரோனாவில் இருந்து மீண்டதை கொண்டாடும் விதமாகவும், தங்கள் நிறுவனத்தை மீண்டும் திறந்து பணிகளை தொடங்கும் விதமாகவும் சீனாவின் சுஜோ நகரில் உள்ள யுவேவா என்ற தொழிற்சாலை 10 ஜோடிகளை வைத்து முத்தப் போட்டி நடத்தி மகிழ்ந்துள்ளது.

கண்ணாடி அடுக்கு வழியாக இளம் ஜோடிகள் முத்தமிடும் புகைப்படங்களையும் இணையத்தில் பகிர்ந்துள்ளது.


Advertisement