ஜிம்மில் தீயாய் ஒர்க் அவுட் செய்யும் அட்டக்கத்தி நாயகி.! இணையத்தை கலக்கும் புகைப்படங்கள்!!
பார்க்கும்போது உடம்பெல்லாம் நடுங்குது! 13-வது மாடியின் பால்கனியில் தொங்கியப்படி 2 சிறு குழந்தைகள்! பதறவைக்கும் வீடியோ காட்சி...
சமூக ஊடகங்களில் பரவும் ஒரு ஆபத்தான காட்சி தற்போது உலகம் முழுவதும் விவாதமாகியுள்ளது. சீனாவின் ஒரு உயர்மாடி குடியிருப்பின் 13வது மாடி பால்கனியில் இரண்டு சிறுவர்கள் உயிர் பிழைப்பை பொருட்படுத்தாமல் ஆபத்தான முறையில் தொங்கிய சம்பவம் அனைவரையும் அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.
13வது மாடியில் உயிர் ஆபத்து
இந்த வீடியோவில், ஒரு சிறுவன் தொங்கியபடியே புல்-அப்கள் செய்து கொண்டிருப்பது மனதை பதற வைக்கும் வகையில் இருந்தது. வீடியோ முடிவில் அவர்கள் பாதுகாப்பாக மீட்கப்பட்டார்களா என்பது தெளிவாக தெரியவில்லை. இருந்தாலும், அவர்கள் இருவரும் நலமாக இருப்பார்கள் என நெட்டிசன்கள் நம்பிக்கை தெரிவித்து வருகின்றனர்.
அண்டை வீட்டாரின் பதிவு
இந்த சம்பவத்தை அண்டை வீட்டுக்காரர் ஒருவர் பதிவு செய்து, Instagram இல் @nihaochongqing என்ற கணக்கில் பகிர்ந்துள்ளார். வீடியோ வெளிவந்ததும், பலரும் பெற்றோரின் அலட்சியத்தை சுட்டிக்காட்டினர்.
இதையும் படிங்க: Video: பாம்பை விழுங்க முயன்ற எருமை மாடு! பாம்பு தப்பிக்க என்னா பண்ணுது பாருங்க! கடைசியில் என்னாச்சுன்னு தெரியுமா? திக் திக் நிமிட காணொளி...
நெட்டிசன்களின் கடும் விமர்சனம்
“இவ்வளவு கவனக்குறைவான பெற்றோர்களை சிறையில் அடைக்க வேண்டும்” என ஒருவரும், “ஐயோ கடவுளே! இதைப் பார்த்ததும் உடல் நடுங்கியது” என இன்னொருவரும் கருத்து தெரிவித்தனர். பலர், “குழந்தைகள் பாதுகாப்பாக இருக்கிறார்களா?” என கவலை வெளிப்படுத்தியுள்ளனர்.
தற்போது இந்த வைரல் வீடியோ சமூக ஊடகங்களில் வேகமாக பரவி, பெற்றோர் பொறுப்பின்மை மற்றும் குழந்தைகள் பாதுகாப்பு குறித்து கடும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. குழந்தைகளின் உயிர் பாதுகாப்பில் அலட்சியம் காட்டுவது எவ்வளவு ஆபத்தானது என்பதை இந்த சம்பவம் மீண்டும் நினைவூட்டுகிறது.
இதையும் படிங்க: ஆட்டம்மா ஆடுற! வாலிபருடன் சினிமா பாடலுக்கு சேர்ந்து டான்ஸ் ஆடிய இளம்பெண்! அதை பார்த்த அம்மா செய்த வெறித்தனமான செயல்! வைரலாகும் வீடியோ....