சிறகடிக்க ஆசை சீரியல் நடிகை தற்கொலை! அதிர்ச்சியில் ரசிகர்கள்...!
கொரோனா வைரஸ் தாக்குதலால் நாளுக்குநாள் உயரும் பலி எண்ணிக்கை! சீன அரசு வெளியிட்ட அதிர்ச்சித் தகவல்!
கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு நாளுக்கு நாள் உயிரிழப்புகளின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. மேலும் இதனால் ஒவ்வொரு நாளும் சீன மக்கள் உயிர் பயத்தில் துடிதுடித்து கொண்டிருக்கின்றனர்.
மேலும் கொரோனா வைரஸுக்கு மருந்துகள் கண்டுபிடிக்கப்படாத நிலையில் நோயை கட்டுப்படுத்த சீன அரசு தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது. மேலும் அதற்காக இரண்டு தற்காலிக மருத்துவமனைகளும் கட்டப்பட்டுள்ளது.

அதுமட்டுமின்றி கொரோனா வைரஸ் தோன்றிய வுஹான் நகரம் முற்றிலும் முடக்கப்பட்டுள்ளது. மேலும் கொரோனா வைரஸ் அச்சுறுத்தலால் சீனாவில் உள்ள பிற நாட்டினை சேர்ந்த மக்கள் தாயகத்திற்கு திருப்பி அனுப்பப்படுகின்றனர்.
இந்நிலையில் தற்போது கொரோனா வைரஸ் தாக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 492 ஆக உயர்ந்துள்ளதாக சீன அரசு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. மேலும் 20000க்கும் மேற்பட்டோர் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.