உலகம் லைப் ஸ்டைல்

பார்க்கும்போதே மனசு பதறுது!! எரியும் கட்டிடத்திலிருந்து கீழே தூக்கி வீசப்பட்ட குழந்தை!! வைரலாகும் வீடியோ!!

Summary:

தென்னாபிரிக்காவில் எரியும் கட்டிடத்தில் இருந்து குழந்தை ஒன்று தூக்கிவீசப்பட்டு காப்பாற்றப்

தென்னாபிரிக்காவில் எரியும் கட்டிடத்தில் இருந்து குழந்தை ஒன்று தூக்கிவீசப்பட்டு காப்பாற்றப்படும் காட்சிகள் இணையத்தில் வெளியாகி வைரலாகிவருகிறது.

தென்னாபிரிக்காவின் முன்னாள் அதிபர் சிறையில் அடைக்கப்பட்டதை தொடர்ந்து அந்நாட்டில் கலவரம் வெடித்துள்ளது. நாட்டின் பல இடங்களில் மக்கள் போராட்டத்திலும், வன்முறையிலும் ஈடுபட்டுவருகின்றனர். இந்நிலையில் அந்நாட்டின் ஒரு கட்டிடத்தில் ஏற்பட்ட தீ விபத்தினால் அந்த கட்டிடத்தில் இருந்தவர்கள் அலறியடித்துக்கொண்டு கட்டிடத்தில் இருந்து வெளியேறினர்.

அப்போது பெண் ஒருவர் தனது குழந்தையை காப்பாற்றும்பொருட்டு, கட்டிடத்தின் கீழே இருந்தவர்களை நோக்கி தனது குழந்தையை தூக்கி வீச, கீழே இருந்தவர்கள் அந்த குழந்தையை பத்திரமாக மீட்டனர். இந்த வீடியோ காட்சி தற்போது இணையத்தில் வெளியாகி வைரலாகிவருகிறது.


Advertisement