இந்து மத வழிபாட்டு தலத்தில் இங்கிலாந்து பிரதமர்..!! மனைவியுடன் மனம் உருக பிரார்த்தனை..!!



British Prime Minister Rishi Sunak along with his wife offered prayers at a Hindu shrine in Delhi.

டெல்லியில் உள்ள இந்து மத வழிபாட்டு தலத்தில் இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக் தனது மனைவியுடன் வழிபாடு மேற்கொண்டார்.

புது டெல்லி, ஜி-20 உச்சிமாநாடு டெல்லி பிரகதி மைதானத்தில் உள்ள பாரத் மண்டபத்தில் கோலாகலமாக தொடங்கியது. இந்த மாநாட்டில் அமெரிக்க அதிபர் ஜோ பைடன், இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக் உள்ளிட்ட ஜி-20 கூட்டமைப்பு நாடுகளின் தலைவர்கள் பங்கேற்றனர்.

ஜி-20 அமைப்பிற்கு இந்த ஆண்டு இந்தியா தலைமை வகிக்கும் நிலையில், பிரதமர் மோடி இந்த மாநாட்டிற்கு தலைமை தாங்கினார். நேற்று முதல் நாள் நிகழ்ச்சிகள் முடிந்த நிலையில்ல், ஜி-20 மாநாட்டின் 2 வது நாள் நிகழ்ச்சிகள் இன்று தொடங்க உள்ளது.

இந்த நிலையில், டெல்லியில் உள்ள சுவாமி நாராயண் அக்ஷார்தாம் வழிபாடு தலத்திற்கு இன்று காலை தனது மனைவி அக்ஷதா மூர்த்தியுடன் வந்த இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக், அங்கு வழிபாடு மேற்கொண்டார். இந்திய வம்சாவளியான ரிஷி சுனக் இந்து மதத்தை சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.