2 கோடி தரேன்... என்கூட வா... ஆசை வார்த்தை சொல்லி 17 வயது சிறுவனை சிதைத்த கொடூரம்! பிரேத பரிசோதனையில் வெளிவந்த அதிர்ச்சி உண்மை...!!!



bhopal-teen-organ-trade-murder-probe

மத்தியப் பிரதேச மாநிலம் போபாலில் கடந்த ஆகஸ்ட் 6-ம் தேதி காணாமல் போன 17 வயது சிறுவன், சில நாட்களுக்குப் பிறகு சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சிறுவனின் உடலில் இருந்து விதைப்பைகள் அகற்றப்பட்டிருந்தது பிரேதப் பரிசோதனையில் தெரியவந்துள்ளது. இதையடுத்து, சட்டவிரோத உறுப்பு விற்பனை தொடர்பான கோணத்திலும் போலீசார் விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளனர்.

சிறிய தலாப் பகுதியில் சடலம் மீட்பு

போபாலைச் சேர்ந்த சிறுவன் ஆகஸ்ட் 6-ம் தேதி திடீரென மாயமானார். இதுகுறித்து அவரது குடும்பத்தினர் அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து தேடுதல் பணியில் ஈடுபட்டனர். இந்த நிலையில், ஆகஸ்ட் 11-ம் தேதி சிறிய தலாப் (Chhota Talab) பகுதியில் சிறுவனின் சடலம் கண்டெடுக்கப்பட்டது.

இதையும் படிங்க: இவ்வளவு டார்ச்சலா? காதலில் தொடங்கி கட்டுப்பாட்டில் முடிந்த உறவு! 2 வருடங்களாக மூடிய அறைக்குள் நடந்த கொடூரம்... அதிர்ச்சியில் உறைந்துபோன நீதிமன்றம்..!!!

சடலம் அடையாளம் காண முடியாத நிலையில் இருந்ததால், சிறுவனின் குடும்பத்தினர் அவரது ஆடைகள் மற்றும் செருப்புகளை வைத்து அடையாளம் கண்டனர். ஆகஸ்ட் 14-ம் தேதி அந்த சடலம் காணாமல் போன சிறுவனுடையதே என்பதை குடும்பத்தினர் உறுதி செய்தனர்.

ரூ.2 கோடி ஆசை காட்டி அழைத்துச் சென்றதாக தகவல்

விசாரணையின் ஒரு பகுதியாக 13 சந்தேக நபர்களை பிடித்து போலீசார் தீவிரமாக விசாரித்தனர். இதில், சிறுவனுக்கு ரூ.2 கோடி வழங்குவதாக ஆசை வார்த்தை கூறி, அவரது விதைப்பைகளை வெளிநாடுகளில் விற்பனை செய்யும் நோக்கில் அவரை ஏமாற்றி அழைத்துச் சென்றதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

மற்றொரு சடலம் குறித்தும் விசாரணை

இதற்கிடையே, சிறுவனின் உடலை பிரேதப் பரிசோதனை செய்தபோது அவரது விதைப்பைகள் அகற்றப்பட்டிருந்தது தெரியவந்தது. இதனால், சட்டவிரோத உறுப்பு விற்பனை கும்பலின் தொடர்பு குறித்து விசாரணை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

இந்த வழக்கின் பின்னணியில் செயல்பட்டவர்கள் யார், உறுப்புகளை வெளிநாட்டுக்கு அனுப்ப திட்டமிடப்பட்டதா என்பது உள்ளிட்ட பல்வேறு கோணங்களில் விசாரணை நடைபெற்று வருவதாக கூடுதல் துணை ஆணையர் ஷைலேந்திர சிங் சௌஹான் தெரிவித்துள்ளார். ஏற்கனவே இதேபோன்று விதைப்பைகள் அகற்றப்பட்ட நிலையில் மற்றொரு சடலம் கண்டெடுக்கப்பட்டிருப்பதும் விசாரணையில் கூடுதல் கவனத்தை பெற்றுள்ளது. போபால் சிறுவன் கொலை தொடர்பான முழு பின்னணியையும் கண்டறிய போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.