அய்யா... அங்க கொஞ்சம் பாருங்க! தலையில் இருந்த புல் கட்டுக்குள்... முன்னும் பின்னும் பதுங்கி இருந்த பாம்புகள்! அதிஷ்டவசமாக உயிர் தப்பிய விவசாயி... திக் திக் வீடியோ!!!
விவசாய நிலத்தில் தலையில் புல் சுமையை சுமந்தபடி வேலை செய்த முதியவருக்கு அருகில் இருந்தவர்கள் அதிர்ச்சியடையும் வகையில் இரண்டு பெரிய பாம்புகள் இருந்துள்ளன. முன்னும் பின்னுமாக பாம்புகள் தொங்கியபோதும், அது குறித்து எதுவும் தெரியாமல் முதியவர் தனது வேலையைத் தொடர்ந்து செய்துள்ளார். இந்த காட்சியை அங்கிருந்தவர்கள் வீடியோவாக பதிவு செய்த நிலையில், அது தற்போது இணையத்தில் வேகமாக பரவி வருகிறது.
தலையில் இருந்த புல் கட்டுக்குள் பதுங்கி இருந்த பாம்புகள்
விவசாயப் பணியில் ஈடுபட்டிருந்த முதியவர், வழக்கம்போல் புல் கட்டை தலையில் தூக்கிச் சென்றுள்ளார். அப்போது அந்தச் சுமையின் இருபுறமும் இரண்டு பெரிய பாம்புகள் வெளியே தொங்கிக் கொண்டிருந்தன. அவை ஏற்கனவே புல் கட்டுக்குள் சென்றிருந்ததா அல்லது சுமையைத் தலையில் வைக்கும் நேரத்தில் உள்ளே நுழைந்ததா என்பது தெரியவில்லை. ஆனால், அருகில் இருந்தவர்களின் கவனத்துக்கு பாம்புகள் வந்தபோதும் முதியவருக்கு அதுபற்றி எந்தத் தகவலும் இல்லை.
இதையும் படிங்க: BREAKING: சற்று முன்... நகைக்கடன் உச்சவரம்பு உயர்வு...! தமிழக அரசு வெளியிட்ட ஹாப்பி நியூஷ்!!!
பதற்றத்தில் வீடியோ எடுத்த பொதுமக்கள்
முதியவரின் தலைக்கு மிக அருகில் பாம்புகள் இருப்பதை பார்த்த அங்கிருந்தவர்கள் உடனடியாக பதற்றமடைந்தனர். அவருக்கு ஆபத்து ஏற்படக்கூடாது என்பதால், நிலைமையை கவனித்தபடியே சிலர் தங்களது செல்போன்களில் காட்சிகளை பதிவு செய்தனர். பாம்புகள் நகர்ந்து கொண்டிருந்த போதிலும், அவை முதியவரை தாக்கவில்லை.
அதிர்ஷ்டவசமாக தப்பிய முதியவர்
சில நேரம் பாம்புகளுடன் அறியாமலேயே இருந்த முதியவர், எவ்வித காயமும் இன்றி தப்பியுள்ளார். பாம்புகள் கடிக்காமல் சென்றதால் பெரிய அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது. விவசாயப் பணிகளின்போது எதிர்பாராத வகையில் வன உயிரினங்களை எதிர்கொள்ள நேரிடும் என்பதையும், அவற்றிடம் மிகுந்த கவனத்துடன் இருக்க வேண்டியதன் அவசியத்தையும் இந்த வீடியோ மீண்டும் நினைவூட்டியுள்ளது.
वृद्ध आदमी खेत में काम कर रहा और सर पर बोझ रखकर ले जा रहा है और उसे पता ही नहीं आगे और पीछे दो सांप लटक रहे हैं।
सांप इसके बोझ मे पहले से ही घुसे होंगे या बोझ रखते समय इसे पता ही नहीं चला कब घुस गए।
इसकी भूल है या पालतू है pic.twitter.com/mQQ9bcoy2p— Argumentor (@Mountain4u) October 6, 2026
இதையும் படிங்க: மூன்று மாதத்தில் ரூ.187 கோடி மிச்சம் செய்த தவெக ஆட்சி! திமுக வுக்கு எதிராக போட்ட ஸ்கெட்ச்.. அப்போ ஆண்டுக்கு 750 கோடியா?