மருத்துவமனை வாசலில் பிச்சை எடுத்த பாட்டியின் வங்கி கணக்கில் இத்தனை கோடியா? அடேங்கப்பா!

மருத்துவமனை வாசலில் பிச்சை எடுத்த பாட்டியின் வங்கி கணக்கில் இத்தனை கோடியா? அடேங்கப்பா!


Beggar own 6 crores in bank account

 லெபானன் நாட்டில் உள்ள சிடான் என்னும் பகுதியில் அமைந்துள்ள மருத்துவமனை ஒன்றில் ஹஜ் வாஃபா முகமது அவத் என்ற பெண் பலவருடங்களாக பிச்சை எடுத்து வந்துள்ளார். நோயாளிகள், பார்வையாளர்கள் என பாலரும் அந்த பெண்ணிற்கு பிச்சை போட்டு வந்துள்ளனர்.

தான் பிச்சை எடுக்கும் பணத்தில் தனது சாப்பாடு செலவு போக மீதி பணத்தை அங்கிருக்கும் தனியார் வங்கி ஒன்றில் அந்த பெண் டெபாசிட் செய்து வந்துள்ளார். இப்படி நாட்கள் செல்ல செல்ல, ஒருநாள் அந்த தனியார் வங்கியில் ஏற்பட்ட நிதி நெருக்கடி காரணமாக அந்த வங்கியை மூட முடிவு செய்துளன்னர்.

Mystery

இதனால், தங்கள் வாடிக்கையாளர்களின் பணத்தை அவர்களுக்கே திருப்பி தர முடிவு செய்து அதற்கான காசோலைகளை அனுப்பியுள்னனர். இதில் ஹஜ் வாஃபா முகமது ஆவத்திற்கு அவரது வங்கிக் கணக்கிலிருந்த பணத்திற்காக 2 காசோலைகள் வந்துள்ளது.

அந்த காசோலையின் மதிப்பு எவ்வளவு தெரியுமா? இந்திய மதிப்பில் சுமார் ரூ 6 கோடியே 37 லட்சம் ஆகும். மருத்துவமனையின் வாசலில் பிச்சை எடுத்த பெண்ணின் வங்கி கணக்கில் இவ்வளவு பணமா என அனைவரும் ஆச்சரியப்பட்டு வருகின்றனர்.