உலகம்

அமெரிக்காவை துரத்தும் சோகம்! முன்னாள் அதிபர் H.W.புஷ் காலமானார்

Summary:

american former president HW Bush passed away

அமெரிக்காவின் முன்னாள் அதிபர் ஜார்ஜ் ஹெச்.டபள்யூ புஷ் நேற்று இரவு காலமானார். 94 வயதான புஷ் வயது முதிர்ச்சியால் ஏற்பட்ட உடல்நலக்குறைவால் காலமானதாக அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர். 

இது குறித்து ஜார்ஜ் ஹெச்.டபள்யூ புஷ்ஷின் மகனும் அமெரிக்க முன்னாள் அதிபருமான ஜார்ஜ் டபள்யூ புஷ், ட்விட்டர் மூலம் தெரிவிக்கையில், ‘நான், ஜெப், நீல், மார்வின், டோரா மற்றும் நான், 94 ஆண்டு கால பெரு வாழ்வை முடித்துக் கொண்டார் என்பதை வருத்தத்துடன் சொல்லிக் கொள்கிறோம்' என்று குறிப்பிட்டுள்ளார். மேலும் ‘ஜார்ஜ் ஹெச்.டபள்யூ புஷ், மிகவும் பண்போடும் மரியாதையோடும் வாழ்ந்தவர். எங்களுக்குக் கிடைத்த மிகச் சிறந்த அப்பா அவர்' என்று தெரிவித்துள்ளார்.

அவரது மறைவையொட்டி அமெரிக்காவின் தற்போதைய அதிபர் டொனால்டு டிரம்ப் தனது இரங்கல் செய்தியில் நாட்டு மக்களுக்கும் புஷ் குடும்பத்தாருக்கும் வருத்தத்தை தெரிவித்துள்ளார்.

சூன் 12, 1924 ஜார்ஜ் ஹெர்பெர்ட் வாக்கர் புஷ், அமெரிக்காவின் 41வது குடியரசுத் தலைவர் ஆவார். 1988 முதல் 1992 வரை பதவியில் இருந்தார். இவரின் மகன் ஜார்ஜ் வாக்கர் புஷ் அமெரிக்காவின் 43வது குடியரசுத் தலைவர் ஆவார். இரண்டாம் உலகப் போரில் இவர் ஐக்கிய அமெரிக்கா கடற்படையில் சேவை செய்தார்.

அமெரிக்காவின் அலாஸ்கா மாகாணத்தில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டு சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள நிலையில் முன்னாள் அதிபரின் மறைவு அந்நாட்டு மக்களை மேலும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
 


Advertisement