ஆசையாக அழைத்து பேன்டீன் ஷாம்பு கொடுத்த வைரமுத்து - புயலை கிளப்பிய பாடகி சுசித்ரா.!
மனைவி, மாமியார், 5 குழந்தைகள் கொடூர கொலை; விவாகரத்து கேட்ட மனைவியால் விபரீத முடிவெடுத்த கணவர்..! இறுதியில் தற்கொலை..!
மனைவி விவாகரத்து கேட்டு நீதிமன்றத்தில் விண்ணப்பித்தால், கணவர் குடும்பத்தையே கொலை செய்த பயங்கரம் நடந்துள்ளது.
அமெரிக்கா உட்டா மாகாணத்தில் மைக்கேல் ஹேட் (வயது 42) என்பவர் வசித்து வருகிறார். இவரின் மனைவி தயுசா ஹேட் (வயது 40). தயுசாவின் தாயார் கெய்ல் ஏரல் (வயது 78). மைக்கேல் - தயுசா தம்பதிக்கு 17 வயது, 12 வயது 7 வயதுடைய மகள்கள், 7 வயது & 4 வயதுடைய மகன்கள் என 5 குழந்தைகள் இருக்கின்றனர்.
இந்த நிலையில், நேற்று இவர்களின் வீட்டில் அதிகாலை நேரத்தில் துப்பாக்கி சத்தம் கேட்டுள்ளது. இதனால் அதிர்ச்சியடைந்த அக்கம் பக்கத்தினர் காவல் துறையினருக்கு தகவல் தெரிவிக்கவே, சம்பவ இடத்திற்கு விரைந்த அதிகாரிகள் வீட்டிற்குள் சென்று பார்த்தபோது 8 குடும்பத்தினர் கொலை செய்யப்பட்டது உறுதியானது.
விசாரணையில், மைக்கேலின் மனைவி தயுசா கணவரிடம் விவாகரத்து கோரிய நிலையில், மைக்கேல் விவாகரத்து வேண்டாம் என பலமுறை மனைவியிடம் மன்றாடி பார்த்துள்ளார். தனது முடிவில் தயுசா உறுதியாக இருக்கவே, குழந்தைகளை இழந்து தன்னால் வாழ இயலாது என எண்ணிய மைக்கேல் விபரீத முடிவெடுத்துள்ளார்.
அவரின் முடிவுப்படி, நள்ளிரவில் குடும்பத்தினர் உறங்கிக்கொண்டு இருந்த வேளையில், அவர்கள் இருந்த அறைக்கு சென்ற மைக்கேல் நடத்திய சரமாரி துப்பாக்கிசூட்டில் குடும்பத்தினர் அனைவரும் உயிரிழந்துள்ளனர். இறுதியில் மைக்கேலும் தன்னைத்தானே சுட்டு தற்கொலை செய்துகொண்டு உயிரை மாய்த்தார் என்பது அம்பலமானது.