தினமும் பேபி பவுடர் சாப்பிட்டு உயிர்வாழும் பெண்மணி: ஒரு நாள் ஆசை, அடிமையாக்கிய சோகம்.!

அமெரிக்காவில் உள்ள லூசியானா மாகாணத்தை சார்ந்த 27 வயதுடைய பெண்மணி டிரக்கா மார்டின். இவர் கடந்த ஆண்டு ஆசைக்காக ஜான்சன் நிறுவனத்தின் பேபி பவுடரை சாப்பிட்டு இருக்கிறார்.
அதன் சுவை பிடிக்க தொடங்கி நாளடைவில் அதனை அதிகமாக சாப்பிட்டுள்ளார். நாள் ஒன்றுக்கு 620 கிராம் அளவிலான பேபி பவுடர் மற்றும் விட்டமின் ஈ-யை தினசரி சாப்பிட தொடங்கி இருக்கிறார்.
இதனால் அவரது இயல்பான உணவு சங்கிலியானது பாதிக்கப்பட்டதாக கூறும் பெண்மணி, கடந்த ஆண்டு மட்டும் இதற்காக 4000 அமெரிக்க டாலர் செலவு செய்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.