ஒரே கேமராவில் 400 செல்பிக்கு போஸ் கொடுத்த சுட்டி கரடி.. அமெரிக்காவில் விசித்திர சம்பவம்..!America Colorado Bears take 400 Selfie on Park Motion Camera

 

பூங்காவில் வசித்து வரும் கரடி ஒன்று அங்குள்ள மோஷன் கேமராவில் 400 போஸ் கொடுத்த சம்பவம் நடந்துள்ளது.

அமெரிக்காவில் உள்ள கொலராடோ மாகாணத்தின் வடக்கில் போல்டர் நகரம் உள்ளது. இந்நகரில் 46 ஆயிரம் ஏக்கர் பரப்பில் மிகப்பெரிய உயிரியல் பூங்காவானது செயல்பட்டு வருகிறது. 

இங்குள்ள விலங்குகளின் நடமாட்டத்தை கண்காணிக்க 9 மோஷன் கேமிராக்கள் அங்கு பொருட்பட்டுள்ளது. விலங்குகள் கேமரா இருக்கும் திசையில் கடந்து சென்றால், அதனை கேமரா சிறிய விடியோவாக பதிவு செய்து புகைப்படம் எடுக்கும்.

America

இந்த நிலையில், கேமராவின் அசைவுகளை கண்டு குதூகலித்த கரடி ஒன்று, மனிதர்கள் செல்பி எடுப்பதை போல விதவிதமான போஸ்களை கொடுத்து செல்கிறது. 

அங்கிருந்த ஒரு கேமிராவில் பதிவான 580 படங்களில் 400 படங்களில் கரை மட்டுமே இடம்பெற்றுள்ளது. இதனை பூங்கா ஊழியர்கள் செய்தி மூலமாக வெளிஉலகிற்கு தெரியப்படுத்தி இருக்கின்றனர்.