10 ஆண்டுகளாக கணவரின் உடலை ஃப்ரீசரில் வைத்திருந்த மனைவி! அதிர்ச்சியூட்டும் தகவல்.



America

அமெரிக்காவில் கணவரின் உடலை 10 ஆண்டுகளாக ஃப்ரீசரில் வைத்திருந்த சம்பவம் அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

அமெரிக்காவின் உடா மாநிலத்தின் டூயெலி நகரைச் சேர்ந்தவர் 75 வயதான ஜுன் சவுரோன் மாதர்ஸ். இவரது கணவர் பால் எட்வர்ட்ஸ் என்பவர் ஒரு ஓய்வு பெற்ற இராணுவ அதிகாரி. 

கடந்த மாதம் 22 தேதி ஜுன் சவுரோன் மாதர்ஸ் வீட்டிற்கு வந்த முன்னாள் ராணுவ அதிகாரிகள், வழக்கமான பொது நல சோதனையை மேற்கொண்டனர். 

America

அப்போது ஜுன் மாதர்ஸ் அங்கே இறந்து கிடந்துள்ளார். அவரது மரணம் இயற்கையானது என போலீசார் கூறியுள்ளனர். அதனை அடுத்து வீட்டை மேலும் சோதனை செய்ததில் ஜுன் மாதர்ஸின் கணவரின் உடல் ஃப்ரீசரில் இருந்ததை பார்த்து போலீசார் அதிர்ச்சி அடைந்துள்ளனர். 

மேலும் அவரது உடலுடன் ஒரு கடிதமும் கண்டெக்கப்பட்டது. அதில் தன்னுடைய மனைவி தன்னை கொலை செய்யவில்லை என்று எழுதப்பட்டிருந்தது. மேலும் அந்த கையெழுத்து பால் எட்வர்ட்ஸின் கையெழுத்து தான் எனவும், கடந்த 2008 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் எழுதப்பட்டது எனவும் போலீசார் உறுதி செய்துள்ளனர்.

மேலும் உயிரிழந்த கணவரின் உடலை 10 ஆண்டுகளாக ஃப்ரீசரில் வைத்திருந்த சம்பவம் அனைவருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.