உணவுக்காக குழந்தைகளை கண்ணீருடன் விற்கும் ஆப்கானியர்கள்.. நெஞ்சை பதறவைக்கும் சோகம்.!Afghanistan Parents Sales Child due to Poor

ஆப்கானிஸ்தானை தலிபான்கள் கைப்பற்றிய பின்னர் மனிதாபிமானம் குறைந்து வருகிறது, அந்நாட்டு மக்கள் உணவுக்காக தவித்து வருகின்றனர். சிலர் தங்களது உடல் உறுப்புகளை விற்பனை செய்யவும் துணிந்து வருகின்றனர் என்று ஐ.நா உலக உணவுத்திட்ட தலைவர் டேவிட் பீசிலி தெரிவித்து இருக்கிறார். 

இந்த விஷயம் தொடர்பாக அவர் கூறுகையில், "ஆப்கானிஸ்தானில் மக்கள் உயிரோடு வாழ்வதற்கு தங்களின் குழந்தைகள் மற்றும் அவர்களின் உடல் உறுப்புகளை விற்பனை செய்யும் நிலையில் உள்ளனர். ஆப்கானிய மக்கள் தொகையில், பாதிக்கும் மேற்பட்ட மக்கள் பசியால் வாடி வருகின்றனர். சர்வதேச நாடுகள் அவர்களுக்கு உதவி செய்ய வேண்டும்.

Afghanistan

வறட்சி, பொருளாதார இழப்பு, கொரோனா, ஆட்சி மாற்ற இழப்பு என பல்வேறு பிரச்சனைகளை ஆப்கானிஸ்தான் சந்தித்துள்ளது. அந்நாட்டில் 2.4 கோடி மக்கள் உணவுப்பஞ்சத்தால் பாதிக்கப்பட்டுள்ளனர். நடப்பு வருடத்தில் 97 % க்கும் மேற்பட்ட மக்கள் வறுமைக்கோட்டுக்கு கீழ் சென்றுள்ளனர்.

கடந்த 20 வருடமாக தாலிபான்களுடன் நடந்த சண்டையால் ஆப்கானிஸ்தான் வறுமை நாடாக இருந்து வந்தது. குழந்தைகளை வைத்து யாரால் உணவளிக்க இயலுமோ, அவர்களுக்கு பெற்ற குழந்தையை கண்ணீருடன் ஆப்கானிய பெற்றோர்கள் விற்பனை செய்கிறார்கள். அவர்களுக்கு உலக நாடுகள் உதவி செய்ய வேண்டும்" என்று தெரிவித்தார்.