வீடியோ: நீங்க சாப்பிட, என் அம்மா சமைச்சி போடணுமா?.. வெளில போங்கடா.. தகப்பனின் நண்பர்களை வெளுத்து வாங்கிய மகன்.!

வீடியோ: நீங்க சாப்பிட, என் அம்மா சமைச்சி போடணுமா?.. வெளில போங்கடா.. தகப்பனின் நண்பர்களை வெளுத்து வாங்கிய மகன்.!


a Son Argue with Father Friends and Guest My Mom was Work Kitchen Only Get out From House

தாய் மீது மகன்களுக்கு இருக்கும் பாசம், இறந்தாலும் பிரிக்க இயலாதது. தாயை தந்தை அடிக்கும் போதும், திட்டும் போதும் மழலையாக இருந்தாலும் தந்தையை தனக்கு தெரிந்த மொழியில் ஆவேசத்துடன் கண்டிக்கும் குழந்தைகள் தான் தாயின் மீது அளவற்ற பாசம் வைத்துள்ள பிள்ளைகளாக இருக்கின்றனர். 

இந்நிலையில், முகநூலில் வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது. இந்த வீடியோ, அரேபிய நாட்டில் பதிவு செய்யப்பட்டதாக தெரியவருகிறது. தந்தையின் நண்பர்கள் அனைவரும் வீட்டிற்கு வந்திருந்த நிலையில், அவர்களுக்கு மகன்கள் சாப்பிட சில பொருட்களை எடுத்து வருகின்றனர். மகன் தந்தையை நோக்கி யார் விருந்தாளிகள்? என்ற கேள்வியை எழுப்புகிறார். 

தந்தையோ அவர்கள் தான் விருந்தாளிகள் என வந்திருந்த நண்பர்களை காண்பிக்க, அனைவரும் சாப்பிட்டு வெளியே செல்லுங்கள். உங்களுக்கு சமைத்துப்போடத்தான் எனது தாய் இருக்கிறாரா? நேற்று முதல் அவர் சமையலறையிலேயே இருக்கிறார். எல்லாம் சாப்பிட்டு வீட்டிற்கு செல்லுங்கள்" என்று ஆவேசத்துடன் கூறுகிறார். இந்த வீடியோ வைரலாகி வருகிறது.