அடேங்கப்பா.. 92 வயதில் 5-வது திருமணம்.. 4 மனைவிகளை விவகாரத்து செய்த ரூபர்ட்.. இதுதான் கடைசி திருமணமாம்..!!

நியூஸ்கார்ப் நிறுவனத்தின் செயல் தலைவர் மற்றும் செல்வந்தர்களில் ஒருவரான ரூபர்ட் முர்டோக் 92 வயதுடையவர் ஆவார். இவர் தற்போது வரை நான்கு திருமணங்கள் செய்த நிலையில், நான்கு பேரையும் விவாகரத்து செய்துவிட்டார்.
இந்த நிலையில் இவர் ஐந்தாவது திருமணம் செய்ய இருப்பதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த ஆகஸ்ட் மாதம் நான்காவது மனைவியான ஜெர்ரி ஹாலை விவாகரத்து செய்துள்ளார்.
மேலும் தற்போது காதலி லெஸ்லி ஸ்மித்துடன் நிச்சயதார்த்தம் செய்துவிட்டு மற்றொரு திருமணத்திற்கு தயாராகி இருக்கிறார். இது தனது கடைசி திருமணம் என்றும், மிகுந்த மகிழ்ச்சியை இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.