நடிகர் அரவிந்த் சாமியின் அப்பா யார் தெரியுமா? பலரும் அறியாத உண்மை!
பாட்டியை பார்த்து பதுங்கிய பாம்பு! ஆனால் பாம்பை அசால்ட்டாக பிடித்து கழுத்தில் போட்ட பாட்டி! திக் திக் வீடியோ காட்சி...
மகாராஷ்டிரா மாநிலத்தின் புனே மாவட்டம், முள்ஷி தாலுகாவில் உள்ள காசர் அம்போலி கிராமத்தைச் சேர்ந்த 70 வயது சகுந்தலா சுதார் என்ற மூதாட்டி, தன்னுடைய வீட்டுக்குள் நுழைந்த பாம்பை சிறிதும் அஞ்சாமல் கையில் பிடித்து கழுத்தில் போடும் வீடியோ சமூக வலைதளங்களில் பரவலாக பகிரப்பட்டு வருகிறது.
துணிச்சலான செயல் - பார்வையாளர்களுக்கு வியப்பு
பாம்பை அருகில் காணும் போதே பெரும்பாலானோர் பயந்து விடுகிறார்கள். ஆனால் சகுந்தலா பாட்டி, எந்தவிதமான தயக்கமும் இல்லாமல் பாம்பை பிடித்து மிகச் சாதாரணமாக கையாளும் காணொளி, பார்வையாளர்களின் கவனத்தை கவர்ந்துள்ளது. பாம்புகள் குறித்து உள்ள தவறான நம்பிக்கைகளை மாற்றவே இந்த செயலைச் செய்ததாகவும் கூறப்படுகிறது.
வயதையும் மீறிய தைரியம்
இந்த வீடியோ இணையத்தில் வைரலாக பரவி வருகின்ற நிலையில், பலரும் அவருடைய தைரியத்தையும் விழிப்புணர்வையும் பாராட்டி வருகின்றனர். “70 வயதிலும் இத்தகைய துணிச்சல் காணக் கிடையாது” என நெட்டிசன்கள் தங்கள் கருத்துகளை பதிவு செய்து வருகின்றனர்.
இதையும் படிங்க: ஈவு இரக்கமே இல்லாமல் வளர்ப்பு மகளை விரட்டி விரட்டி அடித்த கொடுமைபடுத்தும் கொடூர தந்தை! வேடிக்கை பார்த்த தாய்! பதறவைக்கும் சிசிடிவி காட்சி...
விளக்கம் மற்றும் விழிப்புணர்வு
சூழலியல் முக்கியத்துவம் மற்றும் பாம்புகள் பற்றிய தவறான தகவல்களைச் சீர்செய்யும் நோக்கத்துடன் இந்த செயல் மேற்கொள்ளப்பட்டதாக கூறப்படும் இந்த வீடியோ, சமூக வலைதளங்களில் தொடர்ந்து பகிரப்பட்டு வருகிறது. மக்களுக்கு விலங்குகளுடன் பாதுகாப்பான முறையில் நடந்து கொள்ளும் விழிப்புணர்வு ஏற்படுவதற்கான ஒரு முயற்சியாக இது பார்க்கப்படுகிறது.
पुणे के मुलशी तालुका के कासर अंबोली गाँव में 70 वर्षीय शकुंतला सुतार का साहसिक वीडियो सोशल मीडिया पर वायरल हो रहा है। दादी ने अपने घर में निकले धामन साँप को बिना किसी डर के पकड़ा और जागरूकता फैलाने के लिए उसे गले में डाल लिया। 70 साल की उम्र में ऐसा साहसिक कदम उठाना लोगों को बेहद… pic.twitter.com/dug0teGoUX
— ABP News (@ABPNews) July 27, 2025
இதையும் படிங்க: 6 வயது சிறுமியை கடிக்க பாய்ந்த தெரு நாய்கள்! நொடியில் நடந்த அதிர்ச்சி சம்பவம் ! திக் திக் நிமிட சிசிடிவி காட்சி...