உலகம்

ஒரே பிரசவத்தில் 6 குழந்தைகள் பிறந்துள்ள அதிசய நிகழ்வு!! மேலும், அந்த தாய்க்கு கிடைத்த அதிசயம்!!

Summary:

6 born baby


தற்போதைய வாழ்க்கைமுறையில் இரட்டை குழந்தை பிறப்பது என்பதே இரு ஆச்சர்யமான நிகழ்வாகத்தான் பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் பெண் ஒருவருக்கு ஒரே பிரசவத்தில் ஆறு குழந்தைகள் பிறந்துள்ள அதிசய நிகழ்வு நடந்துள்ளது.

அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தை சேர்ந்த பெண் ஒருவர் ஒரே பிரசவத்தில் 4 ஆண் குழந்தை, 2 பெண் குழந்தைளை பெற்றெடுத்துள்ளார். அமெரிக்காவின் டெக்டாஸ் மாகாணத்தின் ஹூஸ்டன் நகரைச் சேர்ந்தவர் தெல்மா சியாகா நிறைமாத கர்ப்பிணியாக இருந்துள்ளார்.

 இவர் இரு தினங்களுக்கு முன்பு  டெக்சாஸில் உள்ள மகளிர் மருத்துவமனை ஒன்றில் பிரசவத்துக்காக அனுமதிக்கப்பட்டிருந்தார். இந்நிலையில், சியாகாவுக்கு வெள்ளிக்கிழமை காலை ஒரே பிரசவத்தில் 6 குழந்தைகள் பிறந்துள்ளது. 

பிரசவத்தில், 2 ஜோடி ஆண் இரட்டையர்களும், அதையடுத்து ஒரு ஜோடி பெண் இரட்டையர்களும் பிறந்தனர். குழந்தைகள் நலமாக இருந்தாலும், தொடர் சிகிச்சைக்காக மருத்துவர்களின் கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளனர். பிரசவத்தில் ஆண் மற்றும் பெண் குழந்தைகள் பிறந்துள்ளதால் தாய் மிகவும் மகிச்சியில் இருந்துள்ளார். 


Advertisement