வங்கி கணக்கில் ஏறிய 200 கோடி மர்ம பணம்! அடுத்த சில நிமிடங்களில் பெண்ணிற்கு காத்திருந்த அதிர்ச்சி!



34-million-dollar-credited-in-american-women-account

அமெரிக்காவில் வசித்துவரும் ரூட் என்ற பெண்ணின் வங்கி கணக்கில் திடீரென 37 மில்லியன் அமெரிக்க டாலர் பணம் ஏறியுள்ளது. அதாவது இந்திய மதிப்பில் சுமார் 200 கோடிக்கும் மேல். தனது வங்கி கணக்கில் இவ்வளவு பணம் ஏறியிருப்பதை பார்த்து ரூட் அதிர்ச்சி அடைந்துள்ளார்.

இந்நிலையில், இந்த மாதம் கிறிஸ்துமஸ் மாதம் என்பதால் மக்கள் மற்றவர்களுக்கு பரிசு பொருட்கள் வழங்குவது வழக்கம். அந்த வகையில் யாரோ தமக்கு கிறிஸ்துமஸ் வருவதை முன்னிட்டு பரிசாக இந்த பணத்தை நமது வங்கி கணக்கில் போட்டுள்ளார்கள் என நினைத்து ரூட் மகிழ்ச்சியின் எல்லைக்கே சென்றுள்ளார்.

Mystery

சரி, இவ்வளவு பணத்தையும் எப்படி செலவு செய்யலாம் என ரூட் யோசித்துக்கொண்டிருந்த நேரத்தில் அவருக்கு ஒரு தொலைபேசி அழைப்பு வந்துள்ளது. அதில், தான் வங்கியில் இருந்து பேசுவதாகவும், 37 மில்லியன் டாலர் பணம் உங்கள் வங்கி கணக்கில் தவறுதலாக ஏறிவிட்டதாகவும், வங்கியே அந்த பணத்தை எடுத்துக்கொள்ளும் எனவும் அந்த நபர் கூறியுள்ளார்.

தொலைபேசியை கட் செய்த சிறிது நேரத்தில் ரூட்டின் வங்கி கணக்கில் இருந்து 37 மில்லியன் டாலர் பணம் எடுக்கப்பட்டுள்ளது. கைக்கு எட்டியது வாய்க்கு எட்டவில்லை என்ற கதையாக என்ன சொல்வதென்று தெரியாமல் ரூட் சோகத்தின் எல்லைக்கே சென்றுவிட்டார்.