கல்யாணம் எப்போ?? குட் நியூஸ் சொன்ன பிக்பாஸ் அருண்.! ரசிகர்கள் வாழ்த்து!!
திருமண நிகழ்வுக்கு படகில் செல்லும்போது நிகழ்ந்த கோரவிபத்து.. 21பேர் நீரில் மூழ்கி பரிதாப பலி..!!
ஏமன் நாட்டின் வடமேற்குப்பகுதியில் அமைந்துள்ள துறைமுக நகரான ஹொடைடாவில் மக்கள் திருமண நிகழ்வுக்காக செங்கடலை கடந்து, அங்குள்ள கமரன் தீவு பகுதிக்கு சென்று கொண்டிருந்தனர்.
அந்த சமயத்தில் இவர்கள் சென்ற படகு எதிர்பாராதவிதமாக கவிழ்ந்து விபத்திற்குள்ளாகவே, கடலில் மூழ்கி பெண்கள் உட்பட சிறுவர்கள் என 27 பேர் மாயமாகினர்.
பின் தகவலறிந்து சம்பவ இடத்திற்கு மீட்புபடையினர் வருவதற்குள் 21 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர் என்று கூறப்படும் நிலையில், மீட்கப்பட்டவர்கள் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதி செய்யப்பட்டுள்ளனர்.
பலத்த காற்றின் காரணமாக படகு கவிழ்ந்திருக்கலாம் என சந்தேகிக்கபடுகிறது. மேலும், திருமணத்திற்கு சென்ற சமயத்தில் 21 பேர் நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.