இந்த சிறுவன் யார் தெரியுமா.! 90களில் சாக்லேட் பாயாக வலம் வந்த பிரபல நடிகரா இவர்.!?Actor prasandh childhood photos trending at social media

இந்திய சினிமா பிரபலங்களின் சிறு வயது புகைப்படம் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அந்த வகையில் பிரபல நடிகர் பிரசாந்தின் சிறு வயது புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது. 90களில் காலகட்டத்தில் பல ஹிட் திரைப்படங்களில் நடித்து பெண்களின் மனதை கவர்ந்து சாக்லேட் பாயாக வலம் வந்தவர் பிரசாந்த்.

Childhood photo

சாக்லேட் பாய் பிரசாந்த்

தமிழில் முதன் முதலில் 'வைகாசி பொறந்தாச்சு' என்ற திரைப்படத்தின் மூலம் கதாநாயகனாக காலடி எடுத்து வைத்தவர் பிரசாந்த். இப்படத்திற்கு பின்பு செம்பருத்தி, ஆணழகன், ஜீன்ஸ், கிழக்கே வரும் பாட்டு போன்ற பல ஹிட் திரைப்படங்களை கொடுத்துள்ளார்.  இயக்குனரும், நடிகருமான தியாகராஜன் என்பவரின் மகனான பிரசாந்த் 90களில் பெண்களின் கனவு கண்ணனாக வலம் வந்தார் என்று கூறினால் அது மிகையாகாது.

இதையும் படிங்க: "என் மன அழுத்தத்திற்கு இது தான் காரணம்" மனம் திறந்து பேசிய மனிஷா கொய்ராலா.!?

மேலும் அந்த காலகட்டத்திலேயே ஐஸ்வர்யா ராய், சிம்ரன், ஜோதிகா, கிரண், சினேகா போன்ற பல முன்னணி நடிகைகளுடன் இணைந்து ஜோடி போட்டு பல வெற்றி திரைப்படங்களை தமிழ் சினிமா ரசிகர்களுக்கு அளித்துள்ளார். தனது நடிப்புத் திறமையின் மூலம் தனக்கென தனி இடத்தை தமிழ் சினிமாவில் நிலைநாட்டி இன்று வரை ரசிகர்களின் மனதில் நீங்கா இடத்தை பிடித்துள்ளார்.

Childhood photo

வைரலாகும் சிறுவயது புகைப்படம்

இது போன்ற நிலையில் சினிமாவில் உச்சத்தில் இருந்து வந்த பிரசாந்த் வின்னர் திரைப்படத்திற்கு பிறகு பெரிதாக ஜொலிக்கவில்லை. இறுதியாக இவர் நடிப்பில் வெளியான மம்பட்டியான் திரைப்படம் தோல்வியை அடைந்தது. இதனை அடுத்து இவர் எந்த திரைப்படங்களிலும் நடிக்காமல் இருந்து வந்த நிலையில், தற்போது இவரது சிறு வயது புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி ரசிகர்களை ஆச்சரியப்படுத்தி வருகிறது.

இதையும் படிங்க: நடிகை ரம்யா பாண்டியனின் வேற லெவல் வைரலாகும் போட்டோ சூட்.! வாயை பிளக்கும் ரசிகர்கள்.!?