அந்தமானில் கச்சேரி.. இன்ப சுற்றுலா சென்ற அய்யனார் துணை நடிகர்கள்.. வைரலாகும் வீடியோ.!
"என் மன அழுத்தத்திற்கு இது தான் காரணம்" மனம் திறந்து பேசிய மனிஷா கொய்ராலா.!?
மனிஷா கொய்ராலாவின் திரை பயணம்
தமிழ் சினிமாவில் 90களில் காலகட்டத்தில் பிரபலமான நடிகையாக இருந்து வந்தவர் மனிஷா கொய்ராலா. இவர் தமிழில் முன்னணி நடிகர்களின் ஹிட் திரைப்படங்களில் கதாநாயகியாக நடித்து ரசிகர்களின் மனதை கவர்ந்தார். தனது நடிப்பு திறமையாலும், அழகினாலும் ரசிகர்களின் மனதில் இடம் பிடித்து தனக்ககென தனி இடத்தை தமிழ் சினிமாவின் நிலைநாட்டி இருந்தார்.
தமிழில் மட்டுமல்லாது இந்தி, தெலுங்கு, கன்னடம் போன்ற மொழிகளிலும் திரைப்படங்களில் கதாநாயகியாக கலக்கி வந்தவர் மனிஷா கொய்ராலா. தமிழில் இவர் நடிப்பில் வெளியான முதல்வன், பாபா போன்ற படங்கள் மிகப் பெரும் வெற்றி அடைந்தன. இவ்வாறு திரைத்துறையில் பிரபலமான நடிகையாக வலம் வந்தார்.
இதையும் படிங்க: உச்சகட்ட கவர்ச்சியில் முன்னழகை முழுவதுமாக காட்டிய ஷிவானி நாராயணன்.? ரசிகர்கள் அதிர்ச்சி.!?

மனிஷா கொய்ராலாவின் கண்கலங்கிய பேட்டி
இது போன்ற நிலையில் சமீபத்தில் பிரபல யூ ட்யூப் சேனலிற்கு அளித்த பேட்டியில் தனக்கு புற்றுநோய் பாதிப்பு ஏற்பட்ட போது நடந்த விஷயங்களை குறித்து மனம் திறந்து பேசி இருக்கிறார். அவர் கூறியதாவது, "எனக்கு புற்று நோய் பாதித்த போது என் குடும்பத்தில் இருந்தவர்கள் மற்றும் நண்பர்கள் அனைவருமே என்னை விட்டு விலகி விட்டனர். யாரும் என்னை வந்து பார்க்கக்கூட இல்லை.
ஆனால் என் பெற்றோர் மற்றும் சகோதரர் சகோதரரின் மனைவி மட்டுமே என்னை பார்த்துக் கொண்டார்கள். புற்றுநோயிலிருந்து வெளிவந்த பின்னர் கூட என்னால் முன்பை போல் வேலை பார்க்க முடியவில்லை. தற்போதும் மன அழுத்தத்துடன் தான் வேலை பார்த்து வருகிறேன்" என்று மிகவும் மனம் வருந்தி பேசியிருந்தார். இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி ரசிகர்கள் வருத்தத்தில் கமெண்ட் செய்து வருகின்றனர்.
இதையும் படிங்க: நடிகை ரம்யா பாண்டியனின் வேற லெவல் வைரலாகும் போட்டோ சூட்.! வாயை பிளக்கும் ரசிகர்கள்.!?