அட.. டைட்டில் வேற லெவலில் இருக்கே.! யோகிபாபுவின் புதிய பட தலைப்பு.! வெளிவந்த போஸ்டர்!!yogibabu-new-movie-title-poster-released

தமிழ் சினிமாவில் காமெடி நடிகராக தனக்கென தனிஇடத்தை பிடித்திருப்பவர் நடிகர் யோகி பாபு. விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான லொள்ளு சபா நிகழ்ச்சியின் மூலம் அறிமுகமான அவர் தொடர்ந்து பல நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு தனது திறமையால் முன்னேறினார். 

சினிமாதுறையை கலக்கும் யோகிபாபு 

அதனைத் தொடர்ந்து தமிழ் சினிமாவில் காலடி வைத்து தனது விடாமுயற்சியால் பல முன்னணி நடிகர்களின் படங்களில் காமெடி நடிகராக கலக்கி வருகிறார். மேலும் அவர் ஹீரோவாகவும் மண்டேலா, பொம்மை நாயகி உள்ளிட்ட சில திரைப்படங்களில் நடித்து வருகிறார். நடிகர் யோகிபாபு பாலிவுட்டிலும் அட்லீ இயக்கத்தில் ஷாருக்கான், நயன்தாரா நடிப்பில் வெளிவந்த ஜவான் படத்தில் நடித்து காலடி பதித்தார். 

இதையும் படிங்க: வாவ்.. இவரா.! நடிகர் விஜய் தேவரகொண்டாவுடன் முதன்முறையாக இணையும் முன்னணி இளம்நாயகி.!

புதிய பட போஸ்டர் 

இவ்வாறு சினிமாதுறையில் முன்னணி பிரபலமாக வலம்வரும் யோகி பாபு தற்போது வாமா என்டர்டெயின்மென்ட் சார்பில் ஜாகிர் அலி தயாரிப்பில் உருவாகும் படத்தில் நடிக்க உள்ளார். இந்தப் படத்தை விநீஷ் மில்லினியம் இயக்குகிறார். இந்நிலையில் படத்திற்கு "ஜோரா கைய தட்டுங்க'' என தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. இந்தப் படத்தின் புதிய போஸ்டரை படக்குழு வெளியிட்ட நிலையில் அது வைரலாகி வருகிறது.

 

இதையும் படிங்க: கருமுட்டை சர்ச்சை; தப்பா பேசுனவங்க மன்னிப்பு கேக்கணும்.! இல்லை.. கடுப்பான பட்டாஸ் பட நடிகை!!