விடுதியில் கேட்ட அலறல் சத்தம்.. உல்லாசத்திற்காக பாலியல் ஊக்க மாத்திரை எடுத்த இளைஞர்.. கதவை திறந்தவர்களுக்கு ஷாக்.!
பாலியல் ஊக்க மாத்திரைகளை அதிகமாக எடுத்த இளைஞர் மரணமடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இன்றைய காலகட்டத்தில் இணையம் மற்றும் சமூக ஊடகங்களின் தாக்கம் அதிகரித்துள்ள நிலையில், பலரும் தங்களது உடல்நிலையை கருத்தில் கொள்ளாமல் மாத்திரைகளை பயன்படுத்தும் பழக்கத்தை கொண்டுள்ளனர். குறிப்பாக பாலியல் உணர்ச்சியை அதிகரிக்கும் வகையில் பயன்படுத்தப்படும் ஊக்க மாத்திரைகள் சமீபகாலமாக அதிகமாக பயன்படுத்தப்பட்டு வருகின்றன.
வயகரா மாத்திரை பயன்பாடு அதிகரிப்பு:
முன்னதாக இந்த மாத்திரைகள் பெரும்பாலும் 60 வயதுக்கு மேற்பட்டவர்களால் பயன்படுத்தப்பட்டு வந்தன. ஆனால் தற்போது வயதைக் கருத்தில் கொள்ளாமல் இளம் வயதினரும் இந்த மாத்திரைகளை பயன்படுத்த தொடங்கியுள்ளனர். உலகளவில் வயகரா போன்ற மாத்திரைகள் அதிகமாக விற்பனை செய்யப்படுவதாக கூறப்படுகிறது.
பாலியல் ஊக்க மாத்திரை:
இதனிடையே காதலியுடன் உல்லாசமாக இருக்க பாலியல் ஊக்கமாத்திரை எடுத்த வாலிபர் மரணமடைந்த அதிர்ச்சி சம்பவமும் நடந்துள்ளது. உத்திரபிரதேச மாநிலத்தை சேர்ந்த இளைஞர் ஒருவர் தனது காதலியுடன் விடுதியில் தங்கி இருந்துள்ளார். அப்போது இருவரும் உல்லாசமாக இருக்க திட்டமிட்ட நிலையில், பாலியல் ஊக்க மாத்திரைகளை கலந்து குடித்ததாக கூறப்படுகிறது.

காதலி தப்பி ஓட்டம்:
இதன் காரணமாக இளைஞரின் உடல்நிலை திடீரென பாதிக்கப்பட்டு மயங்கி விழுந்த நிலையில், காதலி அலறியதால் விடுதி ஊழியர்கள் கதவை திறந்து பார்த்துள்ளனர். அப்போது இளைஞர் மயங்கி கீழே கிடந்ததை கண்டு அதிர்ந்தவர்கள் உடனடியாக அவரை மருத்துவமனைக்கு கொண்டு சென்ற நிலையில், அவரை பரிசோதித்த மருத்துவர்கள் இளைஞரின் உயிரிழப்பை உறுதி செய்துள்ளனர். இந்த சம்பவத்தில் காதலி அங்கிருந்து தப்பி ஓடியதாக தகவல் வெளியாகியுள்ளது.
மருத்துவர்களின் எச்சரிக்கை:
இது தொடர்பாக வழக்குப்பதிந்த போலீசார் விசாரணை நடத்துகையில், உல்லாசமாக இருக்க அதிக அளவில் ஊக்க மாத்திரைகளை எடுத்ததே உயிரிழப்பிற்கு காரணம் என தெரியவந்துள்ளது. உடல்நிலை குறித்து கவனம் செலுத்தாமல் இத்தகைய ஊக்க மாத்திரைகளை அதிகமாக எடுத்துக் கொள்வது உயிருக்கு ஆபத்தானதாக இருக்கலாம் என்று மருத்துவர்களும் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
இதையும் படிங்க: வேலைக்கு செல்லாமல் நாள் முழுக்க சூதாட்டம்.. ரூ.15 லட்சத்தை இழந்த கூலித்தொழிலாளி தற்கொலை.!