சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாகும் பிரபல முன்னணி நடிகை.! அட.. யார்னு பார்த்தீங்களா!!Rashmika going to act as pair to sivakarthickeyan

கடந்த 2022 ஆம் ஆண்டு அறிமுக இயக்குனர் சிபி சக்கரவர்த்தி இயக்கத்தில் வெளிவந்து ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று சூப்பர் ஹிட்டான திரைப்படம் டான். இந்தப் படத்தில் சிவகார்த்திகேயன் ஹீரோவாக நடித்திருந்தார். டான் திரைப்படத்தை சிவகார்த்திகேயனின் எஸ்கே புரொடக்ஷன்ஸும் லைகா நிறுவனமும் இணைந்து தயாரித்திருந்தனர்.

 சிபி சக்கரவர்த்தி -சிவகார்த்திகேயன் கூட்டணி 

படம் விமர்சன ரீதியாக மட்டுமின்றி, வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது. இந்த நிலையில் இயக்குனர் சிபி சக்கரவர்த்தி மீண்டும் சிவகார்த்திகேயனை வைத்து புதிய படத்தை இயக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. திரைக்கதை அமைக்கும் பணி முடிக்கபட்டு வசனம் எழுதும் பணி தொடங்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. இந்த படத்தை பேஷன் ஸ்டுடியோஸ் நிறுவனம் சார்பாக சுகன் தயாரிக்க உள்ளாராம்.

இதையும் படிங்க: மொட்டை மாடியில் தோழியுடன் சிலம்பம் சுற்றும் நடிகை மாளவிகா மோகனன்.! ரசிகர்களை மிரள வைத்த புகைப்படங்கள்!!

Rash

ஜோடியாகும் ராஷ்மிகா 

இந்நிலையில் இப்படத்தில் ஹீரோயினாக நடிக்கப் போவது யார் என்று என்பது குறித்த தகவல் பரவி வருகிறது. அதாவது இந்தப் படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நடிகை ராஷ்மிகா மந்தனா நடிக்கஉள்ளதாகவும், அதற்கான பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாகவும் கூறப்படுகிறது. சிவகார்த்திகேயன் தற்பொழுது அமரன் மற்றும் ஏ. ஆர் முருகதாஸ் இயக்கத்தில் உருவாகும் படத்தில் நடித்து வருகிறார்.

இதையும் படிங்க: இந்த சிறுவன் யார் தெரியுமா.! 90களில் சாக்லேட் பாயாக வலம் வந்த பிரபல நடிகரா இவர்.!?