விஜய் சேதுபதியின் 51வது படம்.! ரசிகர்களை கவர்ந்த டைட்டில் டீசர்.! இதோ..vijay-sethupathi-51-movie-title-is-ace

தமிழ் சினிமாவில் சிறு சிறு கதாபாத்திரங்களில் நடித்து, பின்னர் ஹீரோவாக களமிறங்கி குறுகிய காலத்திலேயே தனது விடாமுயற்சியால், தீராத உழைப்பால் தற்போது முன்னணி நடிகர்களுள் ஒருவராக வலம் வருபவர் நடிகர் விஜய் சேதுபதி. அவர் ஹீரோவாக மட்டுமின்றி தற்போது ரஜினி, கமல், விஜய் படங்களில் வில்லனாகவும் மிரட்டியுள்ளார்.

பாலிவுட்டிலும் கலக்கும் விஜய் சேதுபதி 

அவர் தமிழ் மட்டுமின்றி தெலுங்கு மற்றும் ஹிந்தி மொழி திரைப்படங்களிலும் பிஸியாக நடித்து வருகிறார். விஜய் சேதுபதி பாலிவுட்டில் கடந்த ஆண்டு அட்லி இயக்கத்தில் ஷாருக்கான் மற்றும் நயன்தாரா நடிப்பில் வெளிவந்த ஜவான் படத்தில் வில்லனாக நடித்திருந்தார். மெரி கிறிஸ்துமஸ் படத்திலும் காத்ரினா கைஃப்புடன் இணைந்து நடித்திருந்தார். 

இதையும் படிங்க: அட.. டைட்டில் வேற லெவலில் இருக்கே.! யோகிபாபுவின் புதிய பட தலைப்பு.! வெளிவந்த போஸ்டர்!!

விஜய் சேதுபதியின் 51வது படம் 

இந்நிலையில் விஜய் சேதுபதியின் 51வது படத்தை ஒரு நல்ல நாள் பார்த்து சொல்றேன் படத்தை இயக்கிய பி.ஆறுமுக குமார் இயக்கியுள்ளார். இந்த படத்தை 7சிஎஸ் என்டர்டெயின்மென்ட் தயாரித்துள்ளது. இப்படத்தில் ருக்மணி, யோகி பாபு, பி.எஸ் அவினாஷ், பப்லு பிரித்விராஜ் ஆகியோர் முக்கிய ரோலில் நடித்துள்ளனர். 

பர்ஸ்ட் லுக் டீசர் 

மேலும் இந்த படத்திற்கு ஜஸ்டின் பிராபகரன் இசையமைத்துள்ளார். இந்நிலையில் விஜய் சேதுபதியின் 51-வது படத்திற்கு "ஏஸ்" என தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. இதன் ஃபர்ஸ்ட் லுக் டீசர் வெளியாகி ரசிகர்களை பெருமளவில் கவர்ந்துள்ளது.

இதையும் படிங்க: கருமுட்டை சர்ச்சை; தப்பா பேசுனவங்க மன்னிப்பு கேக்கணும்.! இல்லை.. கடுப்பான பட்டாஸ் பட நடிகை!!