ஒவ்வொரு செகண்டும் திக் திக்.. வேற லெவலில் மிரள வைக்கும் ஹிட் லிஸ்ட் ட்ரைலர்.!!hit-list-movie-trailer-released

இயக்குனர், தயாரிப்பாளர், நடிகர் என பன்முக திறமை கொண்டு வலம் வருபவர் கே.எஸ் ரவிக்குமார். இவர் தனது ஆர்கே செல்லுலாய்ட்ஸ் நிறுவனம் சார்பில் தயாரித்துள்ள படம் ஹிட் லிஸ்ட். இந்தப் படத்தில் தமிழ் சினிமாவில் பல சூப்பர் ஹிட் திரைப்படங்களை கொடுத்த பிரபல இயக்குனர் விக்ரமனின் மகன் விஜய் கனிஷ்கா ஹீரோவாக அறிமுகமாகிறார்.

சைக்கோ திரில்லர் 

சைகோ த்ரில்லராக உருவாக்கியுள்ள இந்த படத்தில் சரத்குமார், கவுதம் மேனன், சமுத்திரகனி, சித்தாரா, கேஎஸ் ரவிக்குமார், முனிஷ்காந்த், ஸ்மிருதி வெங்கட் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். இந்தப் படத்தை சூரியகதிர் மற்றும் கே.கார்த்திகேயன்  ஆகியோர் இயக்கியுள்ளனர்.படத்திற்கு சத்யா இசையமைத்துள்ளார்.

இதையும் படிங்க: பி.டி சார் படக்குழு வெளியிட்ட சூப்பர் அப்டேட்.! மரண வெயிட்டிங்கில் ஹிப்ஹாப் ஆதி ரசிகர்கள்!!

மிரள வைக்கும் ட்ரைலர் 

ஹிட் லிஸ்ட் படம் படம் மே 31ம் தேதி திரையரங்குகளில் ரிலீசாகவுள்ளதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் முன்னரே படத்தின் டீசரை நடிகர் விஜய் சேதுபதி வெளியிட்டு இருந்தார். அது நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் படத்தின் ட்ரெய்லரை நடிகர் சிவகார்த்திகேயன் தனது எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ளார். திரில்லர்  நிறைந்த ஹிட் லிஸ்ட் ட்ரைலர் ரசிகர்களிடையே படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரிக்க செய்துள்ளது.

இதையும் படிங்க: 'நிக்கிறேன்... உங்கள எதிர்த்து நிக்கிறேன்'.! ரசிகர்களை கவர்ந்த எலக்சன் ட்ரைலர்.! எப்படியிருக்கு பார்த்தீங்களா!!