பி.டி சார் படக்குழு வெளியிட்ட சூப்பர் அப்டேட்.! மரண வெயிட்டிங்கில் ஹிப்ஹாப் ஆதி ரசிகர்கள்!!PT sir movie trailer released may 16

தமிழில் பல ஆல்பம் பாடல்களை கொடுத்து ரசிகர்களை கவர்ந்து பிரபலமாக இருப்பவர் ஹிப் ஹாப் ஆதி. அவர் பல முன்னணி நடிகர்களின் படங்களில் இசையமைப்பாளராகவும் பணியாற்றி ரசிகர்களை குத்தாட்டம் போட வைத்துள்ளார். மேலும் அவர் மீசையை முறுக்கு படத்தின் மூலம் நடிகராக அவதாரம் எடுத்து நட்பே துணை, நான் சிரித்தால், அன்பறிவு, வீரன் என பல படங்களில் அசத்தலாக நடித்துள்ளார்.

பி.டி சார் ஹிப்ஹாப் ஆதி 

இந்த நிலையில் தற்போது கார்த்திக் வேணுகோபாலன் இயக்கத்தில் ஆதி நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் பி.டி சார். இந்தப் படத்தை வேல்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனம் தயாரித்துள்ளது. இந்த படத்தில் காஷ்மிரா, அனிதா சுரேந்தர், பாக்கியராஜ், பாண்டியராஜ், முனீஸ்காந்த், தியாகராஜன், பிரபு உள்ளிட்ட பலரும் முக்கிய ரோலில் நடிக்கின்றனர். இந்தப் படத்தில் உடற்பயிற்சி ஆசிரியர் கதாபாத்திரத்தில் ஹிப்ஹாப் ஆதி  நடிக்கிறார்.

இதையும் படிங்க: 'நிக்கிறேன்... உங்கள எதிர்த்து நிக்கிறேன்'.! ரசிகர்களை கவர்ந்த எலக்சன் ட்ரைலர்.! எப்படியிருக்கு பார்த்தீங்களா!!

படத்தின் ட்ரைலர் வெளியீடு 

இந்த படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்து, படம் வெளியாவதற்கான பின்னணி வேலைகள் மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் பி.டி சார் படத்தின் டிரெய்லர் குறித்த அப்டேட் வெளியாகி உள்ளது. அதாவது பி.டி சார் படத்தின் டிரைலர் நாளை மறுநாள் மே 16ஆம் தேதி வெளியாகிறது என அறிவிக்கப்பட்டுள்ளது.


    

இதையும் படிங்க: ரஜினியின் கூலி ட்ரைலரை கலாய்த்தேனா?? கிளம்பிய சர்ச்சை.! பதறியடித்து பதிலளித்த வெங்கட் பிரபு!!