ரஜினியின் கூலி ட்ரைலரை கலாய்த்தேனா?? கிளம்பிய சர்ச்சை.! பதறியடித்து பதிலளித்த வெங்கட் பிரபு!!



venkat-prabhu-tweet-for-kooli-teaser-controversy

தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனராக வலம் வருபவர் வெங்கட் பிரபு. தமிழில் கலகலப்பான, ஜாலியான பல படங்களை இயக்கி வந்த அவர் தற்போது தளபதி விஜய் நடிப்பில் 'கோட்' படத்தை இயக்கி வருகிறார். இப்படத்தின் அடுத்தடுத்த அப்டேட்டிற்காக தளபதி ரசிகர்கள் வெறித்தனமான காத்திருக்கின்றனர். இந்த நிலையில் பிரபல இயக்குனர் லோகேஷ் கனகராஜ் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை வைத்து கூலி என்ற திரைப்படத்தை இயக்குகிறார்.

இந்த படத்தின் டீசர் அண்மையில் வெளியானது. அதில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் கிளாசிக் திரைப்படங்களின் சில வசனங்களும் வெளியானது. இந்நிலையில் பிரபல நடிகரும், ஸ்டாண்ட் அப் காமெடியனுமான கார்த்திக் குமார் சர்ச்சையான வீடியோ ஒன்றை வெளியிட்டிருந்தார்.

 அதில், இப்பொழுது வரும் படங்களின் ட்ரெய்லர்கள் எல்லாம் ஒரே மாதிரி உள்ளது. மேலும் அந்த நடிகர்கள் ஏற்கனவே நடித்த பழைய படங்களிலிருந்தும் வசனங்கள் வைக்கப்படுகின்றது. நீங்கள் என்ன நினைத்தாலும் பரவாயில்லை, இப்பொழுது வரும் டிரைலர் எல்லாம் ஒரே மாதிரிதான் இருக்கிறது என கூறியுள்ளார். இந்த வீடியோவை வெங்கட் பிரபு இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் பகிர்ந்திருந்தார். 

இந்நிலையில் ரஜினிகாந்தின் கூலி ட்ரைலரை வெங்கட் பிரபு கலாய்ப்பதாக சர்ச்சை கிளம்பியது.  இதற்கு பதிலளித்து வெங்கட் பிரபு தன் எக்ஸ் தளப் பக்கத்தில், இல்லவே இல்லை, இது ஒரே பாணியில் கமர்சியல் படம் எடுக்கும் எங்கள் அனைவருக்கும் பொருந்தும் பொதுவான கருத்து. ஒரு விதத்தில் அவர் சொல்வதும் உண்மைதான். கமர்ஷியல் டெம்ப்லேட் இல்லாமல் புதிதாக ஏதேனும் தர முயற்சித்தால் ரசிகர்கள் அதை ஏற்றுகொள்வார்களா?? என வெங்கட் பிரபு கேள்வி எழுப்பியுள்ளார்.