'நிக்கிறேன்... உங்கள எதிர்த்து நிக்கிறேன்'.! ரசிகர்களை கவர்ந்த எலக்சன் ட்ரைலர்.! எப்படியிருக்கு பார்த்தீங்களா!!election-movie-trailer-released

சேத்துமான் என்ற படத்தை இயக்கியதன் மூலம் பிரபலமடைந்த இயக்குனர் தமிழ் இயக்கத்தில் தற்போது உருவாகியுள்ள திரைப்படம் எலக்சன். இந்த திரைப்படத்தை ரீல் குட் பிலிம்ஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் ஆதித்யா தயாரித்துள்ளார். இப்படத்தில் விஜயகுமார், 'அயோத்தி' புகழ் பிரீத்தி அஸ்ராணி, ரிச்சா ஜோஷி, திலீபன், பாவெல் நவகீதன், ஜார்ஜ் மரியம் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர்.

எலக்சன் படத்தில் இணைந்துள்ள நட்சத்திரங்கள் 

இந்த படத்திற்கு கோவிந்த் வசந்தா இசையமைத்துள்ளார்.மகேந்திரன் ஜெயராஜு ஒளிப்பதிவு செய்துள்ளார். எலக்சன் படம் வேலூர் மாவட்டத்தில் நடைபெறும் உள்ளாட்சி தேர்தலை மையப்படுத்தி தயாராகியுள்ளதாக கூறப்படுகிறது. எலக்சன் திரைப்படம் மே 17ஆம் தேதி வெளியாகவுள்ள நிலையில் அண்மையில் இப்படத்தில் இடம்பெற்ற பாடல்கள் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.

இதையும் படிங்க: பாஜகவுடன் கூட்டணி வைக்க அச்சுறுத்தல்.. ஜெயலலிதா போல் தைரியமாக முடிவெடுத்தேன் - பிரேமலதா விஜயகாந்த்!

வெளிவந்த ட்ரைலர் 
இந்த நிலையில் தற்போது எலக்சன் படத்தின் டிரைலர் வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகிறது. இதனை இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் தனது எக்ஸ் தளப்பக்கத்தில் வெளியிட்டுள்ளார். மேலும் படக்குழுவிற்கு வெற்றி பெற வாழ்த்து கூறியுள்ளார். 

இதையும் படிங்க: மோடி மீண்டும் ஆட்சிக்கு வந்தால் 100 நாள் வேலை திட்டம் இருக்காது - திருமாவளவன்!