கங்குவா ரிலீஸ் எப்போ?? சூர்யா ரசிகர்களுக்கு சூப்பர் நியூஸ் சொன்ன முக்கிய பிரபலம்!!kanguva-movie-release-on-deepavali-news-viral

தென்னிந்திய திரையுலகில் பல சூப்பர் ஹிட், மாஸ் திரைப்படங்களில் நடித்து முன்னணி நடிகராக வலம் வரும் சூர்யா தற்போது 'கங்குவா' திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை இயக்குனர் சிவா இயக்குகிறார். யு.வி கிரியேஷன்ஸ் மற்றும் ஸ்டூடியோ கிரீன் நிறுவனங்கள் இணைந்து இப்படத்தை தயாரிக்கிறது.

கங்குவா படத்தில் இணைந்த பிரபலங்கள் 

கங்குவா படத்தில் திஷா பதானி, பாபி தியோல், யோகி பாபு, ரெடின் கிங்ஸ்லி உள்ளிட்ட பலரும் நடிக்கின்றனர். இந்த படம் சர்வதேச அளவில் 38 மொழிகளில் வெளியாக இருப்பதாக திரைப்படத்தின் தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா தெரிவித்திருந்தார். படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்புகள் முடிவடைந்த நிலையில் படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் தற்போது விறுவிறுப்பாக நடைப்பெற்று வருவதாக கூறப்படுகிறது.

இதையும் படிங்க: பதற வைக்கும் கவர்ச்சி.. ஹார்ட்ட வைக்கிற இடமா அது.? திணற வைத்த திஷா பதானி.!

Kanguva

கங்குவா ரிலீஸ் 

கங்குவா படத்தின் டீசர் அண்மையில் வெளிவந்து நல்ல வரவேற்பை பெற்றது. இந்த நிலையில் தயாரிப்பாளர் தனஞ்செயன் செய்தியாளர்கள் சந்திப்பில், கங்குவா திரைப்படத்தின் தயாரிப்பாளர் ஞானவேல்ராஜா கங்குவா படத்தை வரும் தீபாவளிக்கு வெளியிட  திட்டமிட்டுள்ளார்,  இந்த ஆண்டு ஆகஸ்ட் மாதத்தின் இறுதியில் திரைப்படத்தின் விஎஃப்எக்ஸ் மற்றும் 3டி வேலைகள் முடிந்துவிடும் என்றும் கூறியுள்ளார். இதனால் சூர்யா ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளனர்.

இதையும் படிங்க: ஜோதிகாவோட அம்மாவா இது.? தீயாக பரவும் புகைப்படம்.!