ஜோதிகாவோட அம்மாவா இது.? தீயாக பரவும் புகைப்படம்.!jothika mother photo viral on social media

சூர்யாவுடன் காதல் :
கோலிவுட் சினிமாவில் முன்னணி நடிகையாக 90களில் கலக்கியவர் நடிகை ஜோதிகா. அதன் பின்னர் சூர்யாவுடன் படம் நடித்த போது இருவரும் காதலிக்க துவங்கினர். ஒரு கட்டத்தில் இவர்கள் இருவரும் திருமணம் செய்து கொண்ட பின்னர் படங்களில் நடிக்காமல் தனது குடும்பம் மற்றும் குழந்தைகள் மீது கவனம் செலுத்தி வந்தார்.

Jyothika

ஹீரோவே இல்லாத படங்கள் :
நீண்ட இடைவெளிக்கு பின்னர் சினிமாவில் ஜோதிகா மீண்டும் அடி எடுத்து வைத்தார். அப்போது அவர் பெண்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கின்ற கதைகளை தேர்ந்தெடுத்து நடித்து வருகின்றார். சொல்லப்போனால் ஹீரோவே இல்லாத படங்களை தான் அவர் செலக்ட் செய்கிறார். 

இதையும் படிங்க: 18 வருடங்களுக்குப் பிறகு மீண்டும் இணையும் சூர்யா - ஜோதிகா ஜோடி.!! விரைவில் வெளியாக இருக்கும் அப்டேட்.!!

அன்னையர் தினம் :
மும்பையில் அவர் செட்டில் ஆகிய நிலையில் சமீப காலமாக சில பாலிவுட் படங்களிலும் அவர் நடித்து வருகின்றார்.

Jyothika

நேற்று அன்னையர் தினம் என்பதால் நடிகை ஜோதிகா தன்னுடைய தாயுடன் இருக்கின்ற ஒரு புகைப்படத்தை சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டு தனது தாய்க்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். 

தாய் தான் முதுகெலும்பு :
ஒரு குடும்பத்திற்கு தாய் தான் முதுகெலும்பு என்று அந்த புகைப்படத்தில் அவர் குறிப்பிட்டு இருக்கிறார். இதுவரை ஜோதிகாவின் தாய் புகைப்படத்தை யாரும் பார்த்ததில்லை என்பதால் ரசிகர்கள் இதை அதிகப்படியாக பகிர்ந்து வருகின்றனர்.

இதையும் படிங்க: ஜோடியாக சேர்ந்து ஒர்க்கவுட்டில் தெறிக்கவிடும் சூர்யா - ஜோதிகா; அசத்தல் காட்சிகள் இதோ.!