தினமும் குடித்துவிட்டு அடி, உதை.! பொறுக்க முடியாமல் மனைவி செய்த அதிர்ச்சி காரியம்!!wife-killed-husband-for-daily-torturing-her

அசாம் ஜோர்ஹத் மாவட்டத்தைச் சேர்ந்தவர் பிரகலாத் சோரன். இவர் தேயிலை தோட்ட தொழிலாளியாக இருந்தார். இந்த நிலையில் சோரனின் உடல் பாதி எரிந்த நிலையில் மரியானி பகுதியில் கிடந்துள்ளது. இதைக் கண்டு அதிர்ச்சியடைந்த  அப்பக்கம் சென்றவர்கள் உடனே இதுகுறித்து போலீசாருக்கு தகவல் அளித்துள்ளனர். 

குடித்து வந்து அடி உதை 

சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் சோரன் கொலை செய்யப்பட்டு எரிக்கப்பட்டுள்ளார் என்பதும் தெரியவந்தது. மேலும் இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டதில், சோரனின் மனைவிதான் அவரைக் கொன்று எரித்தது தெரியவந்துள்ளது. 

இதையும் படிங்க: மனைவிக்காக போட்ட ஸ்கெட்ச்.! மாமனார் உள்ளே நுழைந்ததால் நேர்ந்த கொடூரம்.! பகீர் சம்பவம்!!

drinking alcohol

கொன்று எரித்த மனைவி 

சோரன் நாள்தோறும் குடித்துவிட்டு வந்து மனைவியுடன் சண்டை போட்டுள்ளார். மேலும் அவரை அடித்து உதைத்து கொடுமைப்படுத்தியுள்ளார். இதனைக் கண்டு அவரது மகன் தினமும் பயந்து மன உளைச்சல் அடைந்துள்ளான். இதனால் மகனுக்காக அவர் திட்டமிட்டு கணவனை கொன்று எரித்துள்ளார் என்பது தெரியவந்துள்ளது. இதனை தொடர்ந்து போலீசார் அவரை கைது செய்துள்ளனர். இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

இதையும் படிங்க: பட்டப்பகலில் காதலி கண்முன்னே துள்ளத்துடிக்க இளைஞருக்கு கொடூரம்.. சென்னையில் பயங்கரம்.!