180 மில்லியன் வருடங்கள் முன்னர் வாழ்ந்த, கடல் டிராகனின் புதைபடிமத்தை கண்டறிந்த ஆய்வாளர்கள்.!

180 மில்லியன் வருடங்கள் முன்னர் வாழ்ந்த, கடல் டிராகனின் புதைபடிமத்தை கண்டறிந்த ஆய்வாளர்கள்.!



180-million-year-sea-dragon-ichthyosaur-fossil-discover

இங்கிலாந்தில் உள்ள கிழக்கு மத்திய பகுதியில் அமைந்துள்ளநாடு ரூத்லாந்து (Rutland). இந்த நாட்டில் உள்ள பல்வேறு பகுதிகளில் கடல் வாழ் உயிரினங்கள் தொடர்பான ஆராய்ச்சிகள் நடந்து வருகிறது. மேலும், வரலாற்றுக்கு முந்தைய பல்வேறு கடல்வாழ் உயிரினங்களின் படிமமும் கண்டெடுக்கப்பட்டுள்ளன. 

Rutland

இந்நிலையில், பிரிட்டிஷ் தொல்லியல் மற்றும் புதைப்படிம ஆய்வாளர்கள் ரூத்திலாந்தில் கடல் டிராகன் எனப்படும் அழிந்துபோன "இக்தியோசர்" (Ichthyosaur) உயிரினத்தின் புதைப்படிமத்தை கண்டெடுத்துள்ளனர். இந்த டிராகன் சுமார் 180 மில்லியன் வருடங்களுக்கு முன்னதாக அப்பகுதியில் கடலாக இருக்கையில் வாழ்ந்து இருக்கலாம் என்றும் தெரிவிக்கின்றனர். 

Rutland

இக்தியோசர் கடல் டிராகன் 10 மீ (32 அடி) வரை வளரக்கூடியது என்றும், இங்கிலாந்து நாட்டில் இவ்வுளவு பெரிய கடல் டிராகனின் புதைப்படிமம் மீட்கப்பட்டது இதுவே முதல் முறை என்றும் ஆய்வாளர்கள் கூறுகின்றனர். கடல் டிராகன் இக்தியோசர் டால்பினை போன்றது, அவை டயனோசர் கிடையாது என்றும் தெரிவிக்கும் ஆய்வாளர்கள், அதுகுறித்த ஆராய்ச்சியை தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றனர்.