உலகம்

சுரங்கத்தில் ஏற்பட்ட திடீர் நிலச்சரிவு! மண்ணுக்குள் புதைந்த நூற்றுக்கணக்கான தொழிலாளர்கள்! அதிகரிக்கும் உயிரிழப்புகள்!

Summary:

160 labours dead in jade mine in myanmar landslide

மியான்மரின் வடக்குப் பகுதியில் உள்ள காச்சின் மாகாணத்தில் ஹபகண்ட் பகுதியில் ஜேட் என்ற மாணிக்க கல் சுரங்க நிலையம் அமைந்துள்ளது. அங்கு சமீபத்தில் கடுமையாகப் பெய்து வந்த கனமழை காரணமாக ஏரிப்பகுதியில் திடீர் நிலச்சரிவு ஏற்பட்டது.

இதில் அங்கு பணிபுரிந்து கொண்டிருந்த ஏராளமான தொழிலாளர்கள் சிக்கியுள்ளனர். அதனை தொடர்ந்து தகவலறிந்து அங்கு விரைந்த தீயணைப்பு துறையினர் தீவிர தேடுதலில் ஈடுபட்ட நிலையில் 162 சடலங்களை கண்டெடுத்தனர். 54 தொழிலாளர்கள் படுகாயமடைந்து  மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும் பலர் நிலச்சரிவில் மாயமாகியுள்ளனர்.

இந்நிலையில் தீயணைப்பு துறையினர் தொடர்ந்து மீட்பு பணியில் ஈடுபட்டு வரும்நிலையில் உயிரிழப்புகளின் எண்ணிக்கை அதிகரிக்கலாம் என அஞ்சப்படுகிறது. மேலும் விபத்துக்கான காரணம் குறித்து தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது.

 


Advertisement