சிறுவன் அணிந்திருந்த சட்டையால் விமானத்தில் ஏற தடை விதித்த அதிகாரிகள்! வெளியான அதிர்ச்சி காரணம்!

சிறுவன் அணிந்திருந்த சட்டையால் விமானத்தில் ஏற தடை விதித்த அதிகாரிகள்! வெளியான அதிர்ச்சி காரணம்!


10 years old boy refused to enter into flight because of his shirt

நியூசிலாந்தை சேர்ந்த லூகாஸ் என்பவரது மகன் ஸ்டீவ் (10). ஸ்டீவ் தென் ஆப்பிரிக்காவில் உள்ள தனது பாட்டியை காண தாயுடன் நியூசிலாந்து விமான நிலையத்திற்கு வந்துள்ளான்.   நியூசிலாந்தில் இருந்து தென்னாப்ரிக்காவிற்கு செல்ல இருந்த விமானத்தில் ஸ்டீவ் ஏற முயன்றபோது பாதுகாப்பு அதிகாரிகள் ஸ்டீவ்வை தடுத்து நிறுத்தியுள்ளனர்.

மேலும், ஸ்டீவ் அணிந்திருக்கும் சட்டையை மாற்றவேண்டும் என்றும் இல்லையெனில் ஸ்டீவ் விமானத்திற்குள் ஏற முடியாது எனவும் அதிகாரிகள் கூறியுள்ளனர். இதற்கு காரணம், ஸ்டீவ் அணிந்திருந்த டீ சர்ட் தான், அதில் பச்சை நிறத்திலான பாம்பு இருக்கும் புகைப்படம் பெரியளவில் அச்சடிக்கப்பட்டிருந்தது.

இதனால் குழம்பி போன ஸ்டீவ்வின் தாய் உடனே ஸ்டீவ் அணிந்திருந்த சட்டையை கழட்டி மாற்றி அணியுமாறு கூறியுள்ளார். அதன்பின்னரே ஸ்டீவ் விமானத்திற்குள் அனுமதிக்கப்பட்டுள்ளார்.