பஜ்ஜிக்குள் பிளாஸ்டிக்! பசியோட வாங்க.. புற்றுநோயுடன் போங்க! கொதிக்கும் எண்ணெயில் பிளாஸ்டிக் பாக்கெட்டை போடும் கடைக்காரர்! அதிர்ச்சி வீடியோ....



plastic-oil-bag-viral-video-ludhiana-street-food

சமீப காலமாக சாலையோர உணவுகளின் தரம் குறித்து பொதுமக்கள் இடையே அதிக எண்ணங்கள் எழுகின்றன. இந்நிலையில், பஞ்சாபின் லூதியானாவில் நடந்த உணவு சம்பவம் சமூக ஊடகங்களில் பெரும் அதிர்வலை ஏற்படுத்தியுள்ளது.ச

மூக வலைதளங்களில் தற்போது வைரலாகும் ஒரு வீடியோவில், ஒரு சாலையோர உணவு விற்பனையாளர், பஜ்ஜி தயார் செய்யும் போது, சீல் செய்யப்பட்ட எண்ணெய் பாக்கெட்டை நேரடியாக கொதிக்கும் எண்ணெயில் போடுவதை காணலாம். பிளாஸ்டிக் மென்மையடைந்ததும், அதனை உடைத்து எண்ணெய்யை பாத்திரத்தில் ஊற்றுகிறார்.இது குறித்த விளக்கமாக, “பாக்கெட்டை எளிதாகத் திறப்பதற்காக இப்படிச் செய்தேன்” என அந்த விற்பனையாளர் கூறியிருந்தாலும், பிளாஸ்டிக் பொருட்கள் கொதிக்கும் எண்ணெயில் போடப்படுவதால் மிகவும் ஆபத்தான ரசாயனங்கள் உணவுடன் கலந்து விடும் என நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.

இதனால் பல நெட்டிசன்கள் அதிர்ச்சியுடன் 'மைக்ரோபிளாஸ்டிக் பஜ்ஜி' என அந்த உணவுக்கு பெயரிட்டுள்ளனர். சுகாதாரத்தில் பாதுகாப்பின்மை, உணவின் தரக்குறைவு உள்ளிட்ட அம்சங்களை முன்வைத்து, இதுபோன்ற செயல்கள் உடனடியாக தடுக்கப்பட வேண்டும் என்று பலரும் கருத்து தெரிவிக்கின்றனர்.இதனைக் கிண்டலாக சிலர், “என் நண்பர் சுவையாக இருந்தது என்று சொன்னார், அதுதான் கடைசி வார்த்தை” என்றும், “பசியுடன் வாருங்கள், புற்றுநோயுடன் வெளியேறுங்கள்” என்றும் தெரிவித்துள்ளனர்.

இதையும் படிங்க: ஐ.. ஜாலி.. கரண்ட் கம்பியில் குரங்கு என்ன பண்ணுதுன்னு பாருங்க! வைரலாகும் வேடிக்கை வீடியோ..

மேலும், சுகாதார அதிகாரிகளை டேக் செய்து நடவடிக்கை எடுக்க வலியுறுத்திய பதிவுகளும் அதிகமாகவே உள்ளன.இந்த சம்பவம் சாலையோர உணவுகளில் நடைமுறைகள் மீதான நம்பிக்கையை கேள்விக்குள்ளாக்குகிறது. பொதுமக்கள் விழிப்புடன் உணவுகளை தேர்வு செய்யும் நேரம் இது என்பதை மறக்கக்கூடாது.

இதையும் படிங்க: இப்படி பண்ணலாமா.... அரசு மருத்துவமனையில் நோயாளிக்கு வழங்கப்பட்ட உணவு! பார்த்ததும் ஷாக்கான நோயாளி மற்றும் உறவினர்கள்! வைரலாகும் அதிர்ச்சி வீடியோ!