சிறுவனை வெறிக்கொண்டு கடித்து குதறிய பிட்புல் நாய்! அலறி துடித்த சிறுவன்! அதை பார்த்து சிரிக்கும் நபர்! பதறவைக்கும் வீடியோ...
மும்பை அருகே மன்குர்ட் பகுதியில் உள்ள MHADA காலனியில் நிகழ்ந்த பிட்புல் நாய் தாக்குதல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 11 வயது சிறுவன் ஹம்சா, ஜூலை 17ஆம் தேதி இரவு 10 மணிக்கு கட்டிடம் எண் 91A முன் ரிக்ஷாவில் விளையாடிக்கொண்டிருந்த போது, அருகில் வசிக்கும் முகமது சோஹைல் ஹசன் கானின் பிட்புல் நாய் திடீரென தாக்கியது.
திடீர் தாக்குதலில் ஹம்சா கன்னத்தில் கடிக்கப்பட்டு காயமடைந்தான். அதே நேரத்தில் அருகிலிருந்தவர்கள் உதவி செய்யாமல் பார்த்து நிற்கும் காட்சிகள் வீடியோவாகப் பதிவாகி, சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.
இந்த சம்பவத்தில், நாயை கட்டுப்படுத்தாமல் விட்ட சோஹைல் மீது BNS சட்டப்பிரிவுகள் 291, 125 மற்றும் 125(A) கீழ் நவ்கர் காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. எனினும், அவரை கைது செய்யாமல் நீதிமன்ற நோட்டீஸ் வழங்கி காவல்துறை விடுவித்தது. இது குறித்து ஹம்சாவின் பெற்றோர் நீதிக்கே எதிரானது எனக் குற்றம் சாட்டியுள்ளனர்.
इस युवक का नाम सोहिल है यह अपने पालतू कुत्ते से मासूम बच्चे को जानबूझकर कटवा रहा है।
मामला मुंबई का है ।
— Priya singh (@priyarajputlive) July 20, 2025
இதையும் படிங்க: ராட்சத அனகொண்டாவை களிமண் கலந்த சேற்றில் எந்த தடையமும் இல்லாமல் தைரியமாக பிடிக்க முயன்ற நபர்! திக் திக் நிமிட காணொளி....