அப்படி போடு.... இப்படி ஒரு ஐடியாவா? சாதாரண நீல நிற தண்ணீர் டிரம்மை ஏசி-யாக மாற்றிய இளைஞர்! இணையத்தை அதிரவைக்கும் வீடியோ!!!
இந்தியாவில் கோடைகால வெப்பம் அதிகரித்துள்ள நிலையில், ஒரு சாதாரண பிளாஸ்டிக் டிரம்மை வைத்து உருவாக்கப்பட்ட புதுமையான கூலர் சமூக வலைதளங்களில் கவனம் ஈர்த்துள்ளது. குறைந்த செலவில் செய்யப்பட்ட இந்த முயற்சி, பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. வீடியோ வெளியாகியதும் லட்சக்கணக்கானோர் பார்வையிட்டு வருகின்றனர்.
பிளாஸ்டிக் டிரம்மில் உருவான ஏர் koolar
இணையத்தில் பரவி வரும் வீடியோவில், ஒரு நபர் நீல நிற டிரம்மை பாதியாக வெட்டி, அதில் மின்சார மோட்டார் மற்றும் விசிறியை பொருத்தியிருப்பது தெரிகிறது. காற்றை குளிர்விக்க வைக்கோல் போன்ற பொருட்களை சுற்றிலும் அமைத்து, எளிய முறையில் தேசி ஏர் கூலர் உருவாக்கப்பட்டுள்ளது. இதனால் வெளியே வரும் காற்று இயல்பாகவே குளிர்ச்சியாக இருக்கும் என கூறப்படுகிறது.
நெட்டிசன்களின் பாராட்டு
இந்த சாதனத்தின் செயல்பாடு பலரையும் கவர்ந்துள்ளது. குறிப்பாக ஏசி வாங்க முடியாதவர்களுக்கு இது ஒரு மாற்று தீர்வாக பார்க்கப்படுகிறது. “இந்தியர்களின் திறமைக்கு அளவே இல்லை” என்ற கருத்துகள் சமூக வலைதளங்களில் அதிகம் பகிரப்பட்டு வருகின்றன. குறைந்த செலவில் இத்தகைய முயற்சி செய்யப்படுவது பாராட்டுக்குரியதாக பலரும் கூறுகின்றனர்.
இதையும் படிங்க: மரண பீதியாகும் காட்சி! ரயிலுக்குள் சிங்கம் பாய்ந்து தாய் மற்றும் குழந்தையை இழுத்து சென்று கொடூர தாக்குதல்.. அதிர்ச்சி வீடியோ..!!
பாதுகாப்பு குறித்த எச்சரிக்கை
ஆனால், இதுபோன்ற மின்சார சாதனங்களை வீட்டிலேயே தயாரிக்கும் போது கவனம் அவசியம் என நிபுணர்கள் எச்சரிக்கின்றனர். தவறான இணைப்புகள் இருந்தால் மின் கசிவு அல்லது விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. அதனால் மின்சார பாதுகாப்பு நடைமுறைகளை கடைபிடிப்பது மிகவும் முக்கியம் என அறிவுறுத்தப்படுகிறது.
இருப்பினும், குறைந்த செலவில் குளிர்ச்சியை தரும் இந்த முயற்சி, எளிய மக்களுக்கு உதவக்கூடிய புதுமையாகவே பார்க்கப்படுகிறது.
இதையும் படிங்க: நம்பவே முடியல... பிறந்த கொஞ்ச நேரத்துலயே கையை ஊன்றி உட்கார்ந்த குழந்தை! அதிர்ச்சியில் உறைந்து போன நர்ஸ்.... தீயாய் பரவும் வீடியோ!!!