ஜிம்மில் தீயாய் ஒர்க் அவுட் செய்யும் அட்டக்கத்தி நாயகி.! இணையத்தை கலக்கும் புகைப்படங்கள்!!
கண்ணீர் வரவைக்கும் காட்சி! கொதிக்கும் பாலில் தவறி விழுந்த 17 மாத குழந்தை! கதறி அழுதபடியே தூக்கிக்கொண்டு ஓடிய தாய்....
ஆந்திரப் பிரதேசம் அனந்தபூர் மாவட்டத்தில் நடந்த பரிதாபகரமான சம்பவம் தற்போது மாநிலம் முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பள்ளி வளாகத்திலேயே நிகழ்ந்த இந்த விபத்து, பெற்றோர் மற்றும் பொதுமக்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கொதிக்கும் பாலில் விழுந்த சிறுமி
செப்டம்பர் 20ஆம் தேதி சனிக்கிழமை, புக்கராயசமுத்திரம் மண்டலத்தில் உள்ள கோரபாடு அருகேயுள்ள அம்பேத்கர் குருகுல் பள்ளியின் சமையலறையில் இந்த துயரச் சம்பவம் நடைபெற்றது. 17 மாதங்கள் ஆன அக்ஷிதா என்ற சிறுமி, தனது தாய் கிருஷ்ணா வேணியுடன் பள்ளிக்கு வந்திருந்தார்.
அன்று தாயார் பணியில் ஈடுபட்டிருந்தபோது, சிறுமி சமையலறை அருகே விளையாடிக்கொண்டிருந்தார். அந்த நேரத்தில் பூனை ஒன்றை பின்தொடர்ந்து மீண்டும் சமையலறைக்குள் சென்ற சிறுமி, கொதிக்கும் பால் நிரம்பிய கொள்கலனின் அருகே சென்றபோது தவறி அதன் உள்ளே விழுந்துவிட்டார்.
இதையும் படிங்க: பள்ளிக்கு சென்ற 11 ஆம் வகுப்பு மாணவன்! திடீரென மயங்கி விழுந்த நொடியில் மரணம்! விழுப்புரத்தில் பெரும் சோகம்...
சிசிடிவியில் பதிவான துயரம்
சிசிடிவி காட்சிகளின் படி, பால் கொள்கலனுக்குள் விழுந்த சிறுமி வலியால் அலறியபடி துடித்தார். உடனே தாயார் ஓடிவந்து மீட்டபோதும், பாலின் கொதிநிலை காரணமாக குழந்தை பரிதாபமாக உயிரிழந்தார். சம்பவ இடத்திலேயே மரணம் ஏற்பட்டது.
சமூக வலைதளங்களில் பரபரப்பு
இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வேகமாக பரவி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
சிறுமி உயிரிழந்த இந்த சம்பவம், பள்ளிகளில் குழந்தைகளின் பாதுகாப்பு குறித்து புதிய கேள்விகளை எழுப்பியுள்ளது. பெற்றோரும் பொதுமக்களும் இதுபோன்ற துயரங்கள் மீண்டும் நடைபெறக்கூடாது என்பதற்கான கடும் கோரிக்கைகளை முன்வைத்து வருகின்றனர்.
వేడి పాలలో పడి చిన్నారి మృతి
అనంతపురం జిల్లాలో విషాదకర ఘటన.
కొర్రపాడు గురుకుల పాఠశాలలో పిల్లలకు సిద్ధం చేసిన వేడి పాలలో ప్రమాదవశాత్తు పడిపోయిన 16 నెలల అక్షిత మృతిచెందింది. కొర్రపాడు గురుకుల పాఠశాలలో ఈ ఘటన జరిగింది.#Anantapur #ChildDeath #HotMilkAccident #SchoolTragedy pic.twitter.com/MsFiilcGP5— Telangana Nestham (@TNestham) September 26, 2025
இதையும் படிங்க: பார்க்கும்போது பதறுது! பேருந்து மோதியதில் நொடியில் பலியான 2 பேர்! யாரு மேல தான் தப்பு! பதறவைக்கும் சிசிடிவி காட்சி....