விநாயகரோடு சேர்ந்து நீரில் மூழ்கிய பக்தர்கள்; உற்சாகமாய் ஆரம்பித்து சோகத்தில் முடிந்த விநாயகர் ஊர்வலம்!!

18 dead in vinayagar oorvalam


18-dead-in-vinayagar-oorvalam

விநாயகர் சதுர்த்தியின் முடிவில் விநாயகர் சிலைகளை ஆற்றிலோ, குளத்திலோ, கடலிலோ கரைப்பது இந்துக்களின் வழக்கமாக இருந்து வருகிறது. இதனை பெரும்பாலும் இளைஞர்கள் தான் முன்னின்று நடத்துவர். விநாயகர் ஊர்வலம் என்றாலே இளைஞர்களுக்கு தனி உற்சாகம் வந்துவிடும்.

விநாயகர் என்றாலே மகாராஷ்டிரா தான் மிகவும் சிறப்பு வாய்ந்த பகுதியாக பார்க்கப்படும். அவர்கள் விநாயகருக்கு தான் அதிக முக்கியத்துவம் கொடுப்பார்கள். இந்த வருடமும் வழக்கம் போல் விநாயகரை கரைக்கும் சடங்குகள் ஆரம்பித்துள்ளன.

18 dead in vinayagar oorvalam at maharastra

இந்நிலையில் மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள பல்வேறு நகரங்கள் மற்றும் சில கிராம பகுதிகளில் விநாயகர் சிலைகளை கரைக்கும் விழாவில் 18 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். ராய்காட், ஜல்னா, புனே உள்ளிட்ட 9 பகுதிகளில் இருந்து 18 பேர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளனர். 

விநாயகரை நீரில் கரைக்க சென்ற போது விநாயகரோடு சேர்ந்து மூழ்கியவர்களின் குடும்பத்தினர் மிகவும் சோகத்தில் ஆழ்ந்துள்ளனர். உற்சாகமாய் ஆரம்பித்த விநாயகர் ஊர்வலம் இப்படி சோகமாய் முடிந்துவிட்டதே என்று பலர் புலம்புகின்றனர்.

18 dead in vinayagar oorvalam at maharastra

மும்பை நகரில் இருந்து விநாயகர் சிலையை கடலில் கரைப்பதற்காக சென்ற பக்தர்களின் படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. மீட்புக்குழுவினர் உடனடியாக 5 பேரை மீட்டதால் உயிர்சேதம் தவிர்க்கப்பட்டது. விநாயகர் சதுர்த்தி விசர்ஜனத்தில் 18 பேர் உயிரிழந்த சம்பவம் பக்தர்கள் இடையே கவலையை ஏற்படுத்தியுள்ளது.