இனிமே யூடியூப்பில் பணம் சம்பாதிப்பது ரொம்ப ஈஸி.! அட்டகாசமான அப்டேட்..!!



YouTube Revenue Earning

யூடியூப் மூலமாக பலரும் வருமானம் ஈட்டலாம். அதே சமயம் நமது வீடியோ தரமானதாக இருந்தால் எதிர்பார்க்கும் வருமானமும் கிடைக்கும். இதற்காக யூடியூப் சில வழிமுறைகளை அறிவித்திருக்கிறது. அந்த வழிமுறைகள் சவாலாக இருந்தாலும், அது குறித்து பயனர்கள் புகார் அளித்ததால் பின் நாட்களில் அதனை தளர்த்தியது.

யூடியூப் நிறுவனத்தின் பழைய விதியின் படி, ஒரு சேனலில் மானிடைசேஷன் செய்வதற்கு குறைந்தபட்சமாக 1,000 சப்ஸ்க்ரைபர்கள், ஒரு ஆண்டில் 4000 மணிநேரம் வீடியோக்களை பார்வையாளர்கள் பார்த்திருக்க வேண்டும் அல்லது 90 நாட்களுக்கு ஷார்ஸ்களில் வியூவர்ஸ் 10 மில்லியனை எட்டியிருக்க வேண்டும் என்ற நிலை இருந்தது.

Youtube

இந்நிலையில் புதிய மானிடசேஷன் ரூல்ஸ் படி, யூடியூப் சேனலில் 500 சப்ஸ்க்ரைபர்கள் மற்றும் 90 நாட்களில் மூன்று வீடியோக்களை பதிவிட்டு இருக்க வேண்டும். இந்த வீடியோக்களில் 3,000 மணிநேரம் பார்வையாளர்கள் பார்த்திருக்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

அதேபோல ஷார்ட்ஸ்களில் மூன்று மில்லியன் வியூவர்ஸ் எட்டியிருக்க வேண்டும் என்றும், இவ்வாறு இருந்தால் போதுமானது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல இந்த நடைமுறை அமெரிக்கா, தைவான், கனடா, தென்கொரியா போன்ற நாடுகளில் முதலில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.