உஷார்! வாட்ஸ் அப் மூலம் பரவுகிறது புதிய வைரஸ்; தகவல்களை பாதுகாக்க எச்சரிக்கை!

உஷார்! வாட்ஸ் அப் மூலம் பரவுகிறது புதிய வைரஸ்; தகவல்களை பாதுகாக்க எச்சரிக்கை!


whatsapp-gold-virus-is-spreading

Whatsapp பயனாளர்களுக்கு வாட்ஸ் அப் நிறுவனம் ஒரு எச்சரிக்கை விடுத்துள்ளது. whatsapp gold என்ற அப்டேட் லிங்க் மூலம் வைரஸ் பரப்பப்படுவதாகவும் அதனை கிளிக் செய்தால் நமது மொபைலில் உள்ள தகவல்கள் திருடப்படும் எனவும் எச்சரிக்கை விடுத்துள்ளது.

இன்றைய காலகட்டத்தில் ஸ்மார்ட் போன்கள் பயன்படுத்துபவர்கள் அனைவரும் நிச்சயம் வாட்ஸ் அப் செயலியை பயன்படுத்தி வருகின்றனர். ஒவ்வொரு நாளும் இந்த வாட்ஸப் பயன்பாடு அதிகரிக்கத் துவங்கியுள்ளது. முக்கியமான தகவல்கள் முதல் அந்தரங்க தகவல்களையும் whatsapp மூலமே அனைவரும் பகிர்ந்து வருகின்றனர். மக்களின் இந்த பயன்பாட்டை சில விஷமிகள் தங்களுக்கு சாதகமாக பயன்படுத்த களமிறங்கியுள்ளனர். அவர்களால் உருவாக்கப்பட்ட  வைரஸ் whatsapp கோல்ட் என்ற லிங்கின் பெயரில் தற்பொழுது வாட்ஸ்அப் மூலம் பரவி வருகிறது. 

Whatsapp

இந்த லிங்கை கிளிக் செய்தால் வாட்ஸப்பில் புதிய வசதிகளை நீங்கள் பெறலாம் என்ற ஆசை வார்த்தை உடல் whatsapp gold என்ற லிங்க் தற்பொழுது வாட்ஸ் அப்பில் பரவி வருகிறது. அந்த லிங்கை கிளிக் செய்தால் நமக்குத் தெரியாமல் மறைமுகமாக நமது ஸ்மார்ட் போனில் வைரஸ்கள் ஊடுருவ துவங்கிவிடும். இதன்மூலம் நாம் வாட்ஸ்அப்பில் பிறருடன் உரையாடுவது மற்றும் நாம் அனுப்பும் தகவல்களை அந்த விஷமிகள் பெற்றுவிடுவர். பின்னர் அதனை வைத்து நம்மிடம் மிரட்டி பணம் பறிக்க வாய்ப்புகள் உள்ளன.

மேலும் அந்த வைரஸ் மூலம் நமது ஸ்மார்ட் போனில் பயன்படுத்தும் வங்கிகள் தொடர்பான செயலிகளையும் அவர்களால் உளவு பார்க்க முடியும். பின்னர் நமக்குத் தெரியாமலேயே பண பரிவர்த்தனைகள் செய்து நம்மை சிக்கலில் சிக்க வைக்கவும் முடியும்.

Whatsapp
எனவே whatsapp gold என்று பரவும் லிங்கினை யாரும் கிளிக் செய்ய வேண்டாம் என whatsapp நிறுவனம் எச்சரிக்கை விடுத்துள்ளது. எனவே உங்கள் வாட்ஸப்பில் அவ்வாறு சந்தேகப்படும் லிங்குகள் வந்தால் கிளிக் செய்யாதீர்கள்.