டெக்னாலஜி

வாட்ஸ்அப்-இல் மாஸ் காட்ட வரும் சூப்பரான புதிய 7 சேவைகள்! தெறிக்கவிடும் பேஷ்புக் நிறுவனம்!

Summary:

Top seven new features in whatsapp coming soon

சாதாரண மனிதன் தொடங்கி technology ஜாம்பவான்கள் வரை இன்று அனைவரும் எளிதாக பயன்படுத்தக்கூடிய ஒரு மெசேஜிங் செயலி என்றால் அது whatsapp தான். பேஸ்புக் நிறுவனம் வாட்ஸ்அப் செயலியை வாங்கியதில் இருந்து தனது வாடிக்கையாளர்களுக்கு  தினம் தினம் புதிய புதிய சேவைகளை அறிமுகம் செய்து வருகிறது.

இந்நிலையில் இன்னும் சில வாரங்களில் புதிய சேவைகள் அறிமுகம் செய்ய உள்ளதாக பேஸ்புக் நிறுவனம் தெரிவித்துள்ளது.

1. டார்க் மோட் சேவை

இரவு நேரங்களில் whatsapp வாடிக்கையாளர்கள் எந்தவித இடையூறுமின்றி பயன்படுத்துவதற்கான புதிய சேவை தான் இந்த சேவை. இதுபோன்ற சேவை youtube, டிவிட்டர், கூகுள் மேப்ஸ் ஆகியவற்றில் ஏற்கனவே உள்ளது. தற்போது இந்த சேவையை whatsapp நிறுவனம் வழங்க உள்ளது.

2. QR கோட்
வாட்ஸ் அப்பில் மற்றவர்களின் தொலைபேசி எண்ணை QR கோட் மூலம் பகிர முடியும். இந்த  வசதியானது தொடர்பு எண், மற்றும் அந்த நபரின் பெயர் இவற்றை தானாகவே நிரப்பிக்கொள்ளும்.

3. குரூப் காலிங்
IOS வாடிக்கையாளர்களுக்கு மட்டுமே பயன்பாட்டிலிருந்த குரூப் காலிங் என்ற வசதி தற்போது ஆண்ட்ராய்டு பயனாளர்களுக்கும் வழங்கவுள்ளது whatsapp நிறுவனம்.

4. மல்டி ஷேர் பைல்ஸ்
இனி வாட்ஸ் அப்பில் பலதரப்பட்ட கோப்புகளை அனுப்ப முடியும் மேலும் ஒரே நேரத்தில் இரண்டுக்கு மேற்பட்ட தொடர்புகளுக்கு நம்மால் கோப்புகளை ஒரே நேரத்தில் பகிர முடியும்.

5. வீடியோ
வாட்ஸ் அப்பில் புதிதாக செய்திகள் வந்திருந்தால் நமக்கு நோட்டிபிகேஷன் காட்டப்படும். நமக்கு வந்துள்ள செய்தியில் வீடியோ இருந்தால் இனி நோட்டிபிகேஷன் மூலமாகவே அந்த வீடியோவை காண இயலும். இதனால் whatsapp உள்ளே செல்லாமலே நம்மால் வீடியோவை பார்க்க முடியும்.

6. தொடர்புகளை ரேங்கிங்.
இந்த வசதி மூலம் நீங்கள் அதிகமுறை பயன்படுத்துபவர்களின் எண்களை ரேங்கிங் செய்ய முடியும். இதனால் நீங்கள் ரேங்கிங் செய்தவர்களின் எண்கள் மற்ற நபர்களின் எண்களுக்கு முன்னதாக காட்டப்படும்.

7. சேமிப்பு
இதுவரை தொலைபேசி அல்லது சிம் கார்ட் இவற்றில் மட்டுமே புதிய தொடர்புகளை சேமித்து வந்தோம். இனி புதிய தொடர்புகளை வாட்ஸ் அப்பில் சேமித்துக் கொள்ளலாம்.


Advertisement