வாட்ஸாப் பயனர்களுக்கு உற்சாக செய்தி! அறிமுகமாகிறது புதிய வசதிகள்

new features to be added in whatsapp


new features to be added in whatsapp

உலகம் முழுவதும் அதிகமான வாடிக்கையாளர்களை கொண்டுள்ள வாட்ஸாப் நிறுவனம் தன்னுடைய வாடிக்கையாளர்களுக்கு அவ்வப்போது புது புது வசதிகளை அறிமுகம் செய்து வருகிறது அந்த வகையில் தற்பொழுது வாட்ஸ்அப் ஐ.ஓ.எஸ். இயங்குதளத்தில் பீட்டா பயனர்களுக்கு புதிய அம்சம் வழங்கப்படுகிறது. புதிய 2.19.10.21 அப்டேட் மூலம் பயனர்களுக்கு பல்வேறு புதிய வசதிகள் கிடைக்கின்றன.

இதுகுறித்து வெளியாகியுள்ள தகவல்களில் புகைப்படங்கள், வீடியோக்கள் அல்லது ஜிஃப்களில் ஸ்டிக்கர்களை சேர்க்க முடியும். இதில் பயனர்கள் நேரம், இருப்பிடம் மற்றும் மூன்றாம் தரப்பு செயலிகளில் கிடைக்கும் தனிப்பட்ட ஸ்டிக்கர்களை பயன்படுத்த முடியும். இந்த அப்டேட்டில் ஸ்டிக்கர்களை தேர்வு செய்ய புதிய வடிவமைப்பு கொண்ட பகுதி வழங்கப்படுகிறது.

Whatsapp

இதோடு மட்டுமல்லாமல் குரூப்களில் இருப்பவர்களுக்கு தனிப்பட்ட முறையில் பதில் அனுப்ப முடியும். வாட்ஸ்அப் ஆண்ட்ராய்டு பீட்டா செயலியில் ஏற்கனவே இந்த அம்சம் வழங்கப்பட்டு இருக்கிறது.முன்னதாக வெளியான தகவல்களில் இந்த அம்சம் தேர்வு செய்யப்பட்ட சில பயனர்களுக்கு மட்டும் ஐ.ஓ.எஸ். இயங்குதளத்தில் வழங்கப்பட்டிருப்பதாக கூறப்பட்டிருந்தது. தற்சமயம் இந்த அம்சம் கொண்டு பயனர் தேர்வு செய்யும் குறுந்தகவல்களுக்கு வாட்ஸ்அப் தானாக புதிய சாட் ஸ்கிரீனை திறக்கும். இதில் பயனர்கள் தனிப்பட்ட முறையில் பதில் அளிக்க முடியும்.