ஒரே ஒரு லிங்க்.. உங்களுடைய அனைத்து மொபைல் நம்பர்களும் தெரிந்து கொள்ளலாம் வாங்க..! 

ஒரே ஒரு லிங்க்.. உங்களுடைய அனைத்து மொபைல் நம்பர்களும் தெரிந்து கொள்ளலாம் வாங்க..! 


Know your Mobile Number Linked with Aadhar

 

நீங்கள் ஆதார் கார்டு வைத்து சிம் வாங்கி இருக்கிறீர்களா? உங்களுடைய ஆதார் கார்டு மூலம் எத்தனை சிம் நீங்கள் வாங்கி இருக்கிறீர்கள்? உங்களுடைய ஆதார் கார்டை வைத்து வேறு யாரேனும் சிம் வாங்கி இருக்கிறார்களா? என்பதையும் தெரிந்து கொள்ளலாம். 

நீங்கள் உபயோகப்படுத்தும் சிம் கார்டு எத்தனை என்பதையும் தெரிந்து கொள்ளலாம். அப்படி வேறு யாரேனும் உங்களுடைய ஆதார் கார்டு மூலம் சிம் வாங்கி இருந்தாலும், அதனை நீங்கள் பிளாக் செய்யலாம்.

இதற்காக நீங்கள் வேறு எங்கும் அலைய வேண்டாம் உங்களுடைய மொபைலில் இருந்து இதை தெரிந்து கொள்ளலாம். இதற்காக தனியாக ஒரு லிங்க் உள்ளது அந்த லிங்கை அழுத்தினாலே போதும். இந்த லிங்க் அரசாங்கத்தின் மூலம் அங்கீகரிக்கப்பட்டது. அதனால் பயப்படத் தேவையில்லை,

https://tafcop.dgtelecom.gov.in/ இந்த இணையதளத்தில் சென்று உங்களுடைய போன் நம்பரை உள்ளிடவும். பிறகு உங்களுடைய மொபைல் நம்பருக்கு ஓடிபி வரும். அந்த ஓ.டி.பி-ஐ போட்டு உங்களுடைய ஆதார் கார்டில் எத்தனை சிம் வரை வாங்கி இருக்கிறீர்கள்? என்றும் அதில் எத்தனை உபயோகப்படுத்துகிறார்கள் என்றும் நீங்களே தெரிந்து கொள்ளலாம்.

Mobile Number

அந்த பக்கத்தில் காட்டும் மொபைல் நம்பர்கள் உங்களுடையது இல்லை என்றால், அதை வேறு யாரோ பயன்படுத்துகிறார்கள் என்று நீங்கள் சந்தேகம் அடைந்தால், அதை நீங்கள் ரிப்போர்ட் அடித்து விடலாம். நீங்கள் ரிப்போர்ட் அடிக்கும் பொழுது உங்களுக்கு ஒரு ரெபெரென்ஸ் ஐடி வரும். அதை வைத்து பிளாக் செய்யலாம். அவர்களின் இருப்பிடமும் அறியலாம்.

இந்த சேவை ஆந்திரப்பிரதேசம், கேரளா, ராஜஸ்தான், தெலுங்கானா, ஜம்மு காஷ்மீர், மேகாலயா, திரிபுரா, மிசோரம், அருணாச்சல பிரதேசம், நாகலாந்து ஆகிய மாநிலங்களில் மட்டுமே செயல்படுத்த முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.