அம்மா.. பயமா இருக்கு! அப்பா குழி தோண்டிட்டு இருக்காரு... மாயமான மகள் தாயிடம் பேசிய கடைசி வார்த்தை! வெளிவந்த திடுக்கிடும் பின்னணி... கொடூர சம்பவம்...!!!



himachal-father-kills-daughter-buries-body

இமாச்சலப் பிரதேசத்தில் காணாமல் போன சிறுமி, தனது தந்தையால் கொலை செய்யப்பட்டு வீட்டின் அருகே புதைக்கப்பட்ட அதிர்ச்சி சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. தாயிடம் கடைசியாக பேசியபோது, வீட்டின் அருகே தந்தை பெரிய குழி தோண்டிக் கொண்டிருப்பதாக சிறுமி அச்சத்துடன் தெரிவித்திருந்தார். அதன்பின் அவரது செல்போன் அணைக்கப்பட்ட நிலையில், தீவிர தேடுதல் நடத்தப்பட்டது.

சிறுமியின் தகவலைக் கேட்ட தாய் உடனடியாக உறவினர்களுக்கும் காவல்துறையினருக்கும் தகவல் தெரிவித்தார். இதையடுத்து வீட்டின் பின்புறம் மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் சோதனை மேற்கொள்ளப்பட்டது. அப்போது புதிதாக தோண்டி மூடப்பட்டிருந்த மண் பகுதி சந்தேகத்தை ஏற்படுத்தியது.

இதையும் படிங்க: ஐயோ... யாராவது காப்பாத்துங்களே! மருத்துவமனை மேல் தளத்திலிருந்து திடீரேன குதித்த வாலிபர்.... அதிர்ச்சி வீடியோ!!!

3 அடி ஆழத்தில் புதைக்கப்பட்ட சிறுமி

சந்தேகமடைந்த காவல்துறையினர் அந்த இடத்தை தோண்டிப் பார்த்தனர். சுமார் 3 அடி ஆழத்தில் சிறுமியின் உடல் புதைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதனால் தேடப்பட்டு வந்த சிறுமி கொலை செய்யப்பட்டிருப்பது உறுதி செய்யப்பட்டது.

தகவலின்படி, சிறுமி கடைசியாக தனது தாயை தொலைபேசியில் தொடர்புகொண்டு, தனது தந்தை வீட்டின் அருகே குழி தோண்டிக் கொண்டிருப்பதாக கூறியுள்ளார். அந்த அழைப்பு முடிந்த சில நிமிடங்களிலேயே செல்போன் அணைக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இந்த தகவல் தற்போது காவல்துறையின் விசாரணையில் முக்கிய ஆதாரமாக பார்க்கப்படுகிறது.

தந்தையை பிடிக்க தனிப்படை அமைப்பு

கொலைக்குப் பிறகு சிறுமியின் தந்தை அங்கிருந்து தப்பிச் சென்று தலைமறைவானதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். அவரை பிடிக்க தனிப்படை அமைத்து போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்து, கொலைக்கான காரணம் குறித்தும் விசாரணை நடத்தப்படுகிறது.

குடும்பத் தகராறு காரணமாக கொலை நடந்ததா அல்லது வேறு ஏதேனும் காரணம் உள்ளதா என்பது உள்ளிட்ட பல்வேறு கோணங்களில் விசாரணை நடைபெற்று வருகிறது. சிறுமி கொலை செய்யப்பட்டு வீட்டின் அருகே புதைக்கப்பட்டிருப்பது அப்பகுதி மக்களிடையே அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

 

இதையும் படிங்க: பார்க்கும்போது பட படன்னு மனசு துடிக்குது...! லாரி டயரில் இருந்து வந்த புகை மூட்டம்...! அடுத்த நொடி டயர் வெடிச்சு தூக்கி வீசப்பட்ட டிரைவர்...! பஞ்சர் கடையில் நடந்த பகீர் காட்சி!!!!